வேலூர்: காட்பாடியிலுள்ள அரசு கல்வியல் கல்லூரியில் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் விடைதாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருவள்ளுவர் அரசு பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஆக. 13) 60-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இளங்கலை விடைத்தாள் திருத்த 12 ரூபாயும், முதுகலைக்குக்கு 15 ரூபாயும் வழங்குவதை உயர்த்தி வழங்க வேண்டும். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ் கிடைப்பது கிடையாது. ஆகவே விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்கலைகழகம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்போது, முன்பெல்லாம் நேரடியாக பணம் வசூலிக்கப்படும். இப்போது வங்கி மூலம் செலுத்துவதாக கூறிவிட்டு செலுத்துவதே இல்லை. விடைத்தாள் திருத்தும் பணியின்போது வழங்கப்பட்டு வந்த தேனீர், பிஸ்கட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது அதனை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சென்னை நகைக்கடன் நிறுவனத்தில் ரூ.20 கோடி நகைகள் கொள்ளை