வேலூர்: அடுத்து பேர்ணாம்பட்டு ராம்பாய் நகர் பகுதியை சேர்ந்தவர் பீடி சுற்றும் தொழிலாளி சிகாமணி (50). இவரது தாயார் பெரிய தாயி (68). 100 நாள் வேலை செய்து வந்துள்ளார். இருவரும் அதே பகுதியில் அருகருகே வசித்து வந்துள்ளனர்.
இதனிடையே கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட வந்துள்ளார் சிகாமணி.இவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல் 100 நாள் வேலைக்கு சென்ற தாய் பெரிய தாயிடம் அவரது மகன் சிகாமணி உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெரிய தாயி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் பெரியதாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிருழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்த பெரிய தாயி, சிகாமணி உடல்களை ஒரே இடத்தில் அஞ்சலிக்காக வைத்து பின்னர் அடக்கம் செய்தனர். தாய் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:மாணவி சத்தியா கொலை வழக்கு - கைதி சதீஷுக்கு சிறையில் பலத்த பாதுகாப்பு