வேலூர்: நீதிமன்றம் எதிரே பிராய்லர் கடை நடத்தி வருபவரிடம் பணம் கேட்டு மிரட்டி, கத்தியால் குத்திய அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாட்ஷா. இவர், சத்துவாசாரியூலுள்ள வேலூர் மாவட்ட நீதிமன்றம் எதிரே பிராய்லர் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று (நவ. 2) அவர் கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரிடம் பணம் கேட்டுள்ளனர்.
ஆனால், சாதிக் பாட்ஷா பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், சாதிக் பாட்ஷாவின் கை, தலை உள்ளிட்டப் பகுதிகளில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த சாதிக் பாட்ஷாவை மீட்ட அக்கம் பக்கத்தினர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வேலூர் சத்துவாசாரி காவல் துறையினர், சாதிக் பாட்ஷாவை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 10 இடங்களில் கத்திமுனையில் வழிப்பறி : பொதுமக்கள் அச்சம்!