வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவரும் நோயாளிகளிடம் அங்கு பணிபுரியும் செவிலியர், உதவியாளர்கள் நோயாளிகளிடம் சிகிச்சையளிக்க லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், மே 17ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவருக்கு ஊசி போடுவதற்காக அங்கு பணிபுரியும் செவிலியர் 200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். நோயாளி அசின்தாஜிடம் செவிலி உதவியாளர் ஜெயா என்பவர் லஞ்சப்பணத்தை வாங்கும் கணொளி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதைத்தொடர்ந்து, அசின்தாஜின் உறவினரும் சமூக ஆர்வலருமான நவ்மான் என்பவர் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளியவர்களிடம் லஞ்சம் பெற்று அறுவை சிகிச்சை அளிக்கும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து, நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதே மருத்துவமனையில் வேறு பிரிவிற்கு மாற்றியுள்ளனர். ஆனால், அங்கும் அவர் லஞ்சம் பெற மாட்டாரா? என்று புகார் அளித்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.