ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் பகுதி விவசாயிகள் 700 பேர் குடும்பத்தினருக்கும், குடியாத்தம் நகர பகுதியில் உள்ள கூலித் தொழிலாளர்கள் ஆயிரம் பேருக்கு உதவும்வகையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் நாளைமுதல் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருவோர், தனிநபர் விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல் ஒரு மணி நேரத்திற்கு 4 பேர் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர். அவசியம் தேவை என்போர் மட்டுமே நாளை முதல் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம்” என்றார்.
இதையும் படிங்க: மதுரையில் ஊரடங்கை மீறியவர்களிடம் ரூ. 77 லட்சம் அபராதம்!