ETV Bharat / state

"பொய் பேசுவதில் கருணாநிதியை மிஞ்சிய ஸ்டாலின்" - அதிமுக மதுசூதனன் - Karunanidhi in lying

வேலூர்: பொய் பித்தலாட்டம் செய்வதில் கருணாநிதியையே, ஸ்டாலின் மிஞ்சி விட்டதாக, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் விமர்சித்துள்ளார்.

அதிமுக மதுசூதனன்
author img

By

Published : Jul 23, 2019, 7:05 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக தேர்தல் பணிக்குழுவின் ஆலோசனை கூட்டம் வேலூரில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், வேலூர் மக்களைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பரப்புரை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மதுசூதனன்

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவைத்தலைவர் மதுசூதனன், எம்ஜிஆரால் வளர்க்கப்பட்ட திமுக பொருளாளர் துரைமுருகன், நன்றி மறந்து அவரை சட்டப்பேரவையில் விமர்சித்தார் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், பொய் பித்தலாட்டம் செய்வதில் கருணாநிதியையே, ஸ்டாலின் மிஞ்சி விட்டதாக விமர்சித்த மதுசூதனன், அதிமுகவின் வரலாற்றை பொறுத்தவரை ஒரு தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது எனவும், அந்த வகையில் வேலூரில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Intro:பொய் பித்தலாட்டம் செய்வதில் ஸ்டாலின் கருணாநிதியையே மிஞ்சி விட்டார் வேலூரில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பேட்டிBody:வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அ தி மு க பாராளமன்ற தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் இன்று வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி மற்றும் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் வேலூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர்கள் ஏசி.சண்முகத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது கூட்டத்திற்கு பிறகு வெளியே வந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் நிருபரிடம் கூறுகையில் திமுக பொருளாளர் துரைமுருகன் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவர் எம்ஜிஆர் துரைமுருகனை படிக்க வைத்தார் ஆனால் நன்றியை மறந்து சட்டசபையில் எம்ஜிஆர் மீது துரைமுருகன் காறித் துப்பினார் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார் இப்படிப்பட்ட கருணாநிதியின் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும் பொய் பித்தலாட்டம் செய்வதில் மு க ஸ்டாலின் அவரது தந்தை கருணாநிதியையே மிஞ்சி விட்டார் அதிமுக இடையில் சரிவை கண்டது இருந்தாலும் அதிமுகவின் வரலாற்றைப் பொருத்தவரை ஒரு தோல்விக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது அந்த வகையில் வேலூரிலும் வெற்றி பெறும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.