சென்னையின், குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க ஜோலார்பேட்டையிலிருந்து, வில்லிவாக்கத்திற்கு விரைவில் ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்படும் என தெற்கு ரயில்வே துறை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஜோலார்பேட்டையிலிருந்து, சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில் வேகன்களில் குடிநீர் கொண்டுவர, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி தண்ணீர் கொண்டு வருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விரைவில் ரயில் மூலம் 525 எம்.எல்.டி வாட்டர் கொண்டு வருவதற்கான பணிகள் துவங்க உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.