ETV Bharat / state

பழச்சாறு என நினைத்து மது அருந்திய சிறுவன்... குற்ற உணர்ச்சியில் மயங்கிய தாத்தா... அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம்! - மது குடித்த சிறுவன் உயிரிழப்பு

வேலூரில் பழச்சாறு என்று நினைத்து மதுவைக் குடித்த சிறுவனும், அம்மதுவை வாங்கிய சிறுவனின் தாத்தாவும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

small boy dies  alcohol  small boy dies after taking alcohol in vellore  vellore small boy dead  vellore news  vellore latest news  வேலூர் செய்திகள்  வேலூரில் சிறுவன் உயிரிழப்பு  மது குடித்த சிறுவன் உயிரிழப்பு  பழச்சாறு என்று நினைத்து மதுவை குடித்த சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் உயிரிழப்பு
author img

By

Published : Oct 3, 2021, 5:38 PM IST

வேலூர்: திருவலம் அண்ணா நகர், கன்னிகோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் - விஜயா தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகன் ரூகேஷ்.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி, மாலை ஆறு மணியளவில் சிறுவனின் தாத்தா சின்னசாமி (62) தனது வீட்டில் இருந்தபடியே மது அருந்தியுள்ளார். தொடர்ந்து மீதம் இருந்த மதுவை வீட்டில் குழந்தைகளின் கைக்கு எட்டும் தூரத்திலேயே வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் ரூகேஷ் வீட்டில் இருந்த மதுவை பழச்சாறு என்று நினைத்து எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அச்சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னசாமியை வீட்டில் இருந்தவர்கள் கடுமையாகத் திட்டியுள்ளனர்.

இதையடுத்து சின்னசாமி மயங்கி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து, உடனடியாக சிறுவனையும் சின்னசாமியையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வரும் வழியிலேயே சின்னசாமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, சிறுவன் ரூகேஷ் தீவிர சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுவனும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து திருவலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நண்பனை ஓட ஓட வெட்டிக் கொன்றவர் காவல் நிலையத்தில் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.