ETV Bharat / state

பல குற்றவழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது... - தனிப் பிரிவு காவல்துறையினர்

வேலூர்: வாலாஜாப்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனையின் போது, பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ஆறு பேரைத்  தனிப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

SIX ARRESTED
author img

By

Published : Sep 19, 2019, 8:19 AM IST

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தனிப் பிரிவு காவல்துறையினர் வாலாஜா டோல்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்தவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் ஆறு பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் செங்கல்பட்டு பகுதியில் பல கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரிய வந்தது.

மேலும், ரமேஷ் ( 36) சுமேஷ் (33 )கார்த்தி (24) இவர்கள் மூன்று பேரும் ஆந்திர மாநிலம் குடிப்பாலா பகுதியில் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள். அமல்ராஜ் (34) பரத் (28) அப்துல்ரகுமான் (30) இவர்கள் மூன்று பேரும் செங்கல்பட்டு, உத்திரமேரூர், சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆறு பேரும் தீவிர விசாரணைக்கு பின் செங்கல்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Intro:வேலூர் மாவட்டம்

வாலஜாப்பேட்டை டோல்கேட் அருகே போலீசார் வாகன சோதனை

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைதுBody:வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தனிப் பிரிவு போலீசார் வாலாஜா டோல்கேட் பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர் விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு பகுதியில் பல கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வந்தவர்கள் என தெரிந்தது இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் ரமேஷ் ( 36) சுமேஷ் (33 )கார்த்தி (24) இவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலம் குடிப்பாலா பகுதியில் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள். மேலும் அமல்ராஜ் (34) பரத் (28) அப்துல்ரகுமான் (30) இவர்கள் 3 பேரும் செங்கல்பட்டு உத்திரமேரூர் சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு கொலை கொள்ளை வழிப்பறி வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆறு பேரையும் தீவிர விசாரணைக்கு பின் செங்கல்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.