ETV Bharat / state

பாஜகவை வெளுத்து வாங்கிய சீமான்! - வேலூர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல்

வேலூர்: டிஜிட்டல் இந்தியா என்று கூறும் மோடியால் வேலூர் தேர்தல் முடிவை இரண்டு மணி நேரத்தில் அறிவிக்க முடியுமா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Seeman Election campaign in Vellore
author img

By

Published : Jul 29, 2019, 12:19 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய சீமான், ‘ஐம்பது நாட்களில் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குவோம், நாட்டு மக்கள் அனைவரது வங்கியிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றெல்லாம் பாஜக தம்பட்டம் அடித்தது. ஆனால், தற்போது அவற்றையெல்லாம் மறந்துவிட்டு பாஜக அரசு செயல்படுகிறது. அது மட்டுமின்றி அப்படி கூறியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்கிறார்கள்’ என வருத்தமாகக் கேள்வி எழுப்பினார்.

பாஜகவை வெளுத்து வாங்கிய சீமான்!

மேலும் பேசிய அவர், ‘நீங்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியாதானே... வேலூர் மக்களவைத் தேர்தல் முடிந்த இரண்டு மணி நேரத்தில் தேர்தல் முடிவுகளை சொல்லுங்கள்’ எனவும் கேள்வி எழுப்பினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய சீமான், ‘ஐம்பது நாட்களில் ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குவோம், நாட்டு மக்கள் அனைவரது வங்கியிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றெல்லாம் பாஜக தம்பட்டம் அடித்தது. ஆனால், தற்போது அவற்றையெல்லாம் மறந்துவிட்டு பாஜக அரசு செயல்படுகிறது. அது மட்டுமின்றி அப்படி கூறியதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? என்கிறார்கள்’ என வருத்தமாகக் கேள்வி எழுப்பினார்.

பாஜகவை வெளுத்து வாங்கிய சீமான்!

மேலும் பேசிய அவர், ‘நீங்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியாதானே... வேலூர் மக்களவைத் தேர்தல் முடிந்த இரண்டு மணி நேரத்தில் தேர்தல் முடிவுகளை சொல்லுங்கள்’ எனவும் கேள்வி எழுப்பினார்.

Intro:டிஜிட்டல் இந்தியா என்று கூறும் மோடியால் வேலூர் தேர்தல் முடிவை இரண்டு மணி நேரத்தில் அறிவிக்க முடியுமா? 2021 தேர்தலில் நான் தான் ஆட்டம் ஆடுவேன் வேலூர் தேர்தல் பரப்புரையில் சீமான் சூளுரை
Body:வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்க்கொண்டார் அப்போது பேசிய சீமான், "
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொன்னது கருப்பு பணம் முடிந்துவிடும் ஊழல் லஞ்சம் ஒழிந்துவிடும் தீவிரவாதம் ஒழிந்துவிடும் 50 நாளில் 50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் உங்களை சொர்க்கத்தில் கொண்டு போய் வைத்து விடுகிறேன் என்று கூறினார் அதற்கு பணம் செல்லாது என்பது தோற்ற தோல்வியை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் இந்தப் பணம் செல்லாது என்றால் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்றார்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் அதற்கு இவர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் தீவிரவாதிகள் வந்து தாக்கி வைத்தார்கள் என்று தெரியும் எல்லாவற்றிலுமே ஒரு ஏமாற்று 15 லட்சம் எல்லார் வங்கி கணக்கிலும் போடுவேன் என்று சொன்னது பிஜேபி தான் ஆனால் இப்பொழுது மொத்தமாக சாதிக்கிறார்கள் அது போன்று அவர் கூறவில்லை அப்படிக் கூறினார் என்று என்ன ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள் கடைசியில் அய்யா அமித்ஷா அவர்களிடம் கேட்டதற்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்று அதற்கு அவர் கூறுகிறார் நாங்கள் ஜெயிக்க மாட்டோம் என்று நினைத்து நிறைய வாக்குறுதிகளை சொல்லிவிட்டோம் மக்கள் எங்களுக்கு செக் வைத்து விட்டார்கள் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை பதில் இல்லை சமாளிக்கிறோம் என்று கூறுகிறார் ஆனால் இப்பொழுது வேலூரிலும் தேர்தல் நடைபெறுகிறது ஐந்தாம் தேதி முடிவடைகிறது நீங்கள்தான் டிஜிட்டல் இந்தியாவில் இருக்கிறீர்களே டிஜிட்டல் இந்தியா தானே ஆறு மணிக்கு முடியும் வாக்குப்பதிவை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் உடனடியாக எண்ணி சொல்லுங்கள் யார் பாராளுமன்ற உறுப்பினர் என்று அது இதற்கு ஒன்பதாம் தேதி வரை தேதி தள்ளி வைக்கிறீர்கள் பிறகு எதற்கு டிஜிட்டல் இந்தியா ஐந்தாம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு அன்று மாலையிலேயே என்னை சொல்லிவிடலாமே எதற்கு நான்கு நாட்கள் தள்ளி வைக்க என்ன வேலை முடிவு எடுக்க வேண்டும் யாருக்கு என்னென்ன வேலை செய்யும் போது குறிப்பாக தபால் வாக்குகள் காவல்துறையின் மற்றும் ராணுவ வீரர்கள் பெரும்பாலானோர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து உள்ளனர் இவர்கள் தீர்மானித்து விடுவார்கள் யார் வெல்வது என்று
.
நான் தோற்றேன் என் மக்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள் 50 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் ஜெயித்தது ஆனால் மக்கள் தொடர்ச்சியாக தோற்றார்கள் நான் அந்த மக்களில் இருந்து ஓடி வந்தவன் ஏமாற்றப்பட்ட பெற்றோர்களில் வஞ்சிக்கப்பட்ட கூட்டத்தில் வீழ்த்தப்பட்ட கூட்டத்தில் கிடந்த மகன் எழுந்து வந்தவன் இந்த நிலையை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தேன் யாரிடமும் சொல்லாமல் ஒற்றை மகனாக வந்து இன்று 16 லட்சத்து 50 ஆயிரம் என்று என் பக்கத்தில் உள்ளனர் நீலகிரியில் மட்டும் கூட்டுத்தொகை சரியாக இருந்திருந்தால் 17 லட்சத்து 50 ஆயிரம் பேர் என் பக்கத்தில் இருந்து இருப்பார்கள் வேலூரில் சேர்த்து தேர்தல் நடந்து இருந்தால் மொத்தமாக 18 லட்சம் பேர் இருந்திருப்பார்கள் என் சின்னம் தெளிவாக அச்சடிக்கப்பட்டு நல்ல தலைவர்கள் போட்டிருந்தால் 20 லட்சம் பேர் என் பக்கத்தில் இருந்திருப்பார்கள் வரும் 2021 தேர்தலில் ஆட்டமே நான்தான் ஆடுவேன் நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் அப்பொழுது வந்து எனக்கு ஓட்டுப் போட்டால் பிஜேபி வந்துவிடும் பம்பாத்தம் எல்லாம் அங்கே செல்லாது நாங்கள் வென்றால் வேளாண் கடன்களை ரத்து செய்வது தம்பி உதயநிதி ஸ்டாலின் வேலூரில் பேசும்போது கூட்டுறவு வங்கியில் நீங்கள் சென்ற நகைகளை அடமானம் வைத்தீர்கள் ஐயாயிரம் ரூபாய்க்கு வைத்து விடுங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பி கொடுத்து விடுவோம் உலகத்தில் எப்படியெல்லாம் தலைவர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டிற்கு தேவை தூய்மை இந்தியா அல்ல பசுமை இந்தியா அருமையான பாரதப் பிரதமர் அவர்களே இந்த பூமியைப் பச்சை போர்வையால் போர்த்தி வதைத் தவிர வேறு வழியில்லை வாருங்கள் சுத்தம் செய்வோம் என்று சொன்னவர்கள் மரம் நடுவது ஏன் மக்கள் இயக்கமாக மாற்ற வில்லை

இந்த மண்ணில் பிறந்த மகத்தான மகன் ஐயா அப்துல் கலாம் அவர்கள் தான் மரத்தில் வலிமையை அருமையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் அணில் வளர்க்கும் ஓடிப்போனது கிளி வளர்த்தேன் பறந்து போனது ஆனால் மரம் வளர்த்து இரண்டும் திரும்பி வந்தது என்று கூறினார் இதைவிட மரத்தை பற்றி யாரும் உணர்த்த முடியாது ஒரு தனி மகன் நடிகர் விவேக் இடத்திலே நீங்கள் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுங்கள் என்று சொன்னதற்கு 36 லட்சம் மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் நட்டு வருகின்றார் ஒரு மகன் அதிகாரத்தில் இல்லாமல் எளிய மகன் நட்டு வருகின்றார் அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது இன்றைக்கு சொல்கிறது அரசாங்கம் 10 கோடி பனை மரங்களை நடுங்கள் என்று ஒரு சிறு மகன் எளிய மகன் பல கோடி மனை திட்டம் என்று தேர்தல் வரை உரையில் 2016 பத்தாண்டு பசுமை திட்டம் பல கோடி பனை திட்டம் என்று கொண்டு வந்தேன் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து மேலான பணை விதைகலை பூமியில் முளைக்க வைத்தேன் இவர்கள் இப்பொழுது தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எட்டு வழி சாலை நான்கு வழிச்சாலை பறிக்கப்பட்ட வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள் எத்தனை 100 ஆண்டு 150 ஆண்டு 200 ஆண்டு 300 ஆண்டு பூமியிலிருந்து வெட்டி வீழ்த்தப்பட்டது 4 வழிச்சாலை போட்டு எத்தனை ஆண்டுகள் இருபுறமும் வளர்த்துவிட்ட மரங்கள் எத்தனை ஆனால் இப்பொழுது ஒன்றுமில்லை அரளிச்செடிகள் வளர்த்தீர்கள் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை கதிர் ஆனந்திருக்கு ஓட்டு போட்டால் ஏதாவது நடக்குமா ஐயா ஏசிஎஸ்க்கு ஓட்டு போட்டால் ஏதாவது நடக்குமா ஒன்றும் நடக்காது விவசாயிக்கு போட்டால் அவன் வென்றான் என்றால் கண்டிப்பாக மாற்றம் வரும் ஒரே ஒரு வார்த்தை தாருங்கள் ஆக்கச் சிறந்த வாக்கை தருகிறோம் என்று பேசினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.