திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான நேற்று எஸ்டிபிஐ, நாம் தமிழர் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாபர் மசூதி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது சட்ட ஆவணங்களின் அடிப்படையில் இல்லாமல், நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும், இத்தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்தும், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டுணர்ந்த உண்மைகள் தீர்ப்போடு முரண்படுவதாகவும் இருக்கிறது எனத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
எனவே நியாயமற்ற இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பாபர் மசூதி கட்டடத்தை தகர்த்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும். பாபர் மசூதி இருந்த இடத்தை இஸ்லாமியர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கண்டன கோஷங்களை எழுப்பி 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.