ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... தலைமை ஆசிரியர் கைது! - SALEM POCSO CASE

சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2025, 11:15 AM IST

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஏற்காடு அடிவாரத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (வயது 59) என்பவர் பணியாற்றி வந்தார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர், அரசுப் பள்ளிக்கு மாறுதலாகி வந்த அவர் பள்ளி மாணவிகள் பலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல்ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், பாதிக்கப்பட்ட மாணவிகள், இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் அழுது கூறியுள்ளனர். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு திரண்டு வந்து, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்
கைது செய்யப்பட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் (ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட சைல்ட் லைன் அமைப்பினருக்கும் அந்த புகார் மனுவை அனுப்பி வைத்துள்ளனர். இந்த மனுக்களின் அடிப்படையில், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி மற்றும் சைல்டு லைன் நிர்வாகிகள் தனித்தனியாகச் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குர்பிரீத் கோகி துப்பாக்கி குண்டு பாயந்து உயிரிழப்பு! நடந்தது என்ன?

அப்போது, பள்ளி மாணவிகள் மற்றும் சக ஆசிரியர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மாணவிகளிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்வித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல் ஆய்வாளர் கலைவாணி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்தியச் சிறையில் அடைத்துள்ளார்.

மீண்டும் மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கியது அம்பலம்:

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மீது ஏற்கனவே பல்வேறு பாலியல் புகார்கள் இருந்துள்ளது. குறிப்பாக அவர் சேலம் அடுத்த சுக்கம்பட்டியில் முதுகலை ஆசிரியராக இருந்த போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பிரச்சனையானது. பின்னர் தருமபுரியில் பணிபுரிந்த போதும், மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதற்காக ஒன்றரை ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் பணியில் சேர்ந்த அவர் மேட்டூர் அருகில் உள்ள பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து தற்போது உள்ள பள்ளிக்கும் மாறுதலாகி வந்தார். இங்கு சேர்ந்து 5 மாதத்திலேயே மீண்டும் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவான அறிக்கை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது இடைநீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது" எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.