திருப்பத்தூர் தாயப்பன் நகரைச் சேர்ந்த மோகன் (60), சுகாதாரத் துறையில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், மோகனின் பிள்ளைகள் வெளியூரில் இருப்பதால் அவர்களை பார்க்க செல்வது மோகனுக்கு வழக்கம். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், கணவன்- மனைவி இருவரும் மகன் வீட்டிற்கு சென்றிருந்தபோது காரில் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், 13 சவரன் தங்க நகை, ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
பின்னர், காலையில் வீட்டிற்கு வந்த மோகன், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கந்திலி காவல் துறைக்கு தகவல் கொடுத்தின் அடிப்படையில் கைரேகை நிபுணரும், காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் காவலர்கள் ஈடுபட்டால் இதுபோன்ற திருட்டை தடுக்கலாம் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் !