ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்!

author img

By

Published : Feb 24, 2021, 9:39 PM IST

வேலூரில் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 சட்டத்தை அமல்படுத்தி வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

differently abled person road blockade protest in vellore,  vellore latest news, vellore, வேலூரில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல், வேலூர் மாவட்டச்செய்திகள்
road-blockade-by-differently-abled-people-in-vellore-second-day-of-protest

வேலூர்: மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாற்றுத்திறனாளிகள், வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன்பு நேற்று (பிப். 23) காலவரையற்ற குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலவரையற்ற குடியேறும் போராட்டத்தின் முக்கியக் கோரிக்கையாக கரோனா நிவாரண நிதியாக மூன்றாயிரம் ரூபாய் தரக் கோரியும், தெலங்கானா, புதுச்சேரி போல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாயிரம் அல்லது ஐந்தாயிரமாக உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 2016 சட்டத்தை அமல்படுத்தி வேலைவாய்ப்பினை வழங்கக் கோரியும் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து பேராட்டம் நடத்தியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று (பிப். 24) வேலூர் அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைந்துள்ள ஏலகிரி வளாகம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை வேலூர் தெற்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: 2 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.