ETV Bharat / state

காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

திருப்பத்தூர்: காதலித்து திருமணம் செய்து கொண்ட ஒரே மாதத்தில் மாமியாரின் திருமணத்தைத் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த மருமகளை அடித்துக் கொன்று நாடகமாடிய மாமியாரையும், இளம்பெண்ணின் கணவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

murder
murder
author img

By

Published : Dec 22, 2019, 5:03 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை சிமிக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் சிலம்பரசன் (23 ). சிலம்பரசன் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். சிலம்பரசன் ஆந்திர மாநிலம் குண்டலம் மடுவு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தனின் இரண்டாவது மகள் அகல்யாவை (19) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு, ஓடிச் சென்று கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். ஒரு மாத காலமாக பூந்தென்றலாய் வாழ்ந்து வந்த அகல்யாவின் திருமண வாழ்க்கையில், மாமியார் என்ற போர்வையில் வரதட்சணை புயல் அடிக்க ஆரம்பித்தது. அகல்யா மாமியார் வசந்தாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் அகல்யாவிற்கு தெரிய வரவே, அவரது மாமியார் வசந்தா, அகல்யாவை வரதட்சணை என்ற போர்வையில் கொடுமை செய்து வந்துள்ளார். அதனோடு காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனும் அகல்யாவை கொடுமைப்படுத்தியதால், பெற்றோர் வீட்டிற்கும் செல்ல முடியாமல் ஒவ்வொரு நாளும் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார் அகல்யா.

இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட குடும்பச் சண்டையில் வாக்குவாதம் முற்றி போகவே, அகல்யாவை அவருடைய மாமியாரும், கணவரும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிகழ்வை யாருக்கும் தெரியாதவாறு அகல்யாவின் சடலத்தை அவருடைய வீட்டில் கயிற்றில் கட்டித் தொங்க விட்டு சிலம்பரசனும், அவரது தாயாரும் தலைமறைவாகியுள்ளனர். அகல்யா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அகல்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அகல்யாவின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகியுள்ள சிலம்பரசன் மற்றும் அவரது தாயாரையும் தேடி வருகின்றனர்.

மகளின் மரணம் அறிந்து கதறி அழும் தாயார்

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரே மாதத்தில் மாமியாரின் திருமணத்தைத் தாண்டிய உறவுக்கு இடையூறாக இருந்த மருமகள், வரதட்சணை எனும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொன்று தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும், அகல்யாவை கொன்று நாடகமாடிய கணவன் சிலம்பரசன் மற்றும் அவரது தாயாருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் அகல்யாவின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

அகல்யாவின் சடலம் ஆந்திரா மாநிலம் குண்டலம் மடுவு பகுதிக்கு எடுத்துச் சென்று உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: திருவள்ளூரில் பயங்கரம்: பைக் மீது வெடிகுண்டு தாக்குதல் - உடல் சிதறி உயிரிழந்த 2 இளைஞர்கள்!

Intro:வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு! மாமியார் கள்ள உறவு மருமகளுக்கு தெரிய வரவே மருமகளை கொன்று தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை என நாடகமாடி வருவதாக பெண்ணின் உறவினர்கள் குற்றச்சாட்டு கணவன் தப்பி ஓட்டம் காவல்துறையினர் தீவிர விசாரணைBody:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை சிமிக்கம்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமார் இவர் சில வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார் இவரது மகன் சிலம்பரசன் வயது.(23 ) இவர் சென்னையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார்...

மேலும் ஆந்திர மாநிலம் குண்டலம் மடுவு பகுதியை சேர்ந்த விவசாயி ஆனந்தன் இவரது இரண்டாவது மகள் அகல்யாவயது (19) ஒன்பதாம் வகுப்பு படித்த இவர் வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுடன் விவசாய நிலத்தில் உதவியாக வேலை செய்து வந்துள்ளார்..

இந்நிலையில் அகல்யாவிற்கு திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் போகவே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உங்கள் மகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறியதன் அடிப்படையில் அவளுடைய பெற்றோர்கள் நாட்றம்பள்ளி அடுத்த நாயுணசெரு பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர் .

இந்த நிலையில் திம்மாம்பெட்டை சிமிக்கம்பட்டு பகுதியை சேர்ந்த சிலம்பரசன் அந்த கோயிலுக்கு செல்லும்பொழுது சிலம்பரசனுக்கும் அகல்யா விற்கும்பழக்கம் ஏற்பட்டுள்ளது நாளடைவில் காதலாக மாறி பெற்றோர்எதிர்ப்பை மீறி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு ஓடி சென்று கோயிலில் திருமணம் செய்து கொண்டு சிலம்பரசன் அவரது வீட்டிற்க்கு அழைத்து வந்துள்ளார்....

ஒரு மாத காலமாக பூந்தென்றலாய் வாழ்ந்து வந்த அகல்யாவிற்கு திடீரென்று அவருடைய வாழ்க்கையில் மாமியார் என்ற போர்வையில் வரதட்சணை என்ற புயல் அடிக்க ஆரம்பித்தது....

அகல்யா மாமியார்.(வசந்தா பெயர் மாற்றப்பட்டுள்ளது ) இந்நிலையில் அகல்யாவிற்கு தன் மாமியாருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது...

இது வசந்தாவிற்கு தெரியவரவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த அகல்யாவை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வரதட்சனை என்ற போர்வையில்
அகல்யாவை கொடுமை செய்து வந்துள்ளதாக தெரியவருகிறது....

ஒவ்வொரு நாளும் அவருடைய மாமியார் மற்றும் கணவரிடம் வரதட்சனை என்ற ஒரு போர்வையில் கொடுமை செய்து வந்ததாகவும்...

அகல்யா அவர் பெற்றோர் வீட்டிற்க்கும் மற்றும் உறவினர் வீட்டிற்கும் செல்ல முடியாமல் ஒவ்வொரு நாளும் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்...

இதனை தொடர்ந்து நேற்று திடீரென்று குடும்ப சண்டை முற்றி போகவே அகல்யாவை அவருடைய மாமியார் மற்றும் கணவர் தாக்கியதில் இறந்துள்ளார்...

இதை யாருக்கும் தெரியாமல் அகல்யாவின் சடலத்தை அவருடைய வீட்டில் கயிற்றில் கட்டி தொங்க விட்டு சிலம்பரசன் மற்றும் அவரது தயார் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளனர்....

பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் திம்மாம்பேட்டைகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு ஆந்திராவில் உள்ள அகல்யாவின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்து

.பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருக்கும் சிலம்பரசன் மற்றும் அவருடைய தாயாரை காவல்துறையினர். தேடி வருகின்றனர்....

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரே மாதத்தில் மாமியாரின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மருமகளைவரதட்சனை என்ற போர்வையால் அகல்யாவை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய கணவன் சிலம்பரசனை மற்றும் அவரது தாயாரைகடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோமதியின் உறவினர்கள் கண்ணீருடன் வலியுறுத்தி வருகின்றனர்.....

அகல்யாவின் சடலம் உடற்கூறு ஆய்வு பிறகு ஆந்திரா மாநிலம் குண்டலம் மடுவு பகுதிக்கு எடுத்துச் சென்று மயானத்தில் உடல் தகனம் செய்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது....Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.