ETV Bharat / state

'இது தாங்க திருவிழா'... இந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்..! - கெங்கையம்மன் சிரசு திருவிழா

கெங்கையம்மன் சிரசு திருவிழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும், மான் கொம்பினை சுற்றியும், இசுலாமியர்கள் மத நல்லிணக்கத்தைக் காட்டியுள்ளனர்.

vellore temple festival  GANGAI AMMAN SIRASU FESTIVAL IN VELLORE  GANGAI AMMAN SIRASU FESTIVAL  religious harmony in vellore gangai amman sirasu festivl  மத நல்லிணக்க விழாவாக மாறிய கோயில் திருவிழா  கெங்கையம்மன் சிரசு திருவிழா  வேலூர் கெங்கையம்மன் சிரசு திருவிழா
மத நல்லிணக்க விழாவாக மாறிய கோயில் திருவிழா
author img

By

Published : May 15, 2022, 9:46 PM IST

வேலூர்: குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா பெரும் புகழ்பெற்ற திருவிழாவாகும். இதில் தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வர். கடந்த 2 ஆண்டாக கரோனா பரவலால் பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற்ற திருவிழா, இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் இன்றி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்திருவிழாவில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளும் அரங்கேறின. இன்று (மே 15) காலை குடியாத்தம் பகுதியில் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து கெங்கையம்மன் திருவிழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அம்மன் புகைப்படத்துடன் கூடிய தங்கள் படத்தையும் சேர்த்து வாழ்த்து பேனரை வைத்துள்ளனர். அத்தோடு மட்டும் இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினர்.

மத நல்லிணக்க விழாவாக மாறிய கோயில் திருவிழா

மேலும் திருவிழாவில் கலந்துகொண்டு மான் கொம்பினை சுற்றினர். இஸ்லாமியர்கள், இந்து மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் குடியாத்தம் பகுதியில் இத்தகைய மதங்களைக் கடந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தையும், மக்களிடத்தில் ஒற்றுமையையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.