ETV Bharat / state

கூலிப் பிரச்னையில் பெண் உயிரிழப்பு - திமுக பிரமுகர் கைது! - செம்மரக்கட்டை வெட்டும் தொழிளாளர்கள் கூலி பிரச்சனை

வேலூர்: வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு ஆட்களை அழைத்துச் சென்று செம்மரம் வெட்டுவது தொடர்பாக, ஏற்பட்ட கூலிப் பிரச்னையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

redwood-lady-dead-one-arrest
redwood-lady-dead-one-arrest
author img

By

Published : Dec 18, 2019, 1:15 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(35). இவரது மனைவி சாந்திப்பிரியா(25). இவர்களுக்கு ஆறு வயதில் கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீனிவாசன் என்பவருக்கும் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு செம்மரம் வெட்டும் பணி செய்து வந்துள்ளனர்.

மேலும் சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கு, கூலி ஆட்களை அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் பூங்குளம் பகுதியில் இருந்து சீனிவாசன் ஏழு பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்துள்ளார். அவர்களை அசோகன் ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காக அழைத்துச் சென்று, அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழ்நாட்டிற்குக் கடத்தி வந்து, அவற்றை விற்பனை செய்த பின்னர், கூலி வழங்குவதாகக் கூறி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், 10 நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டும் கும்பல் ஏழு பேரும் சீனிவாசனிடம் கூலி வாங்கித் தருமாறு, வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சீனிவாசன் பணம் பெற்றுத் தர தாமதமானதால் நேற்று இரவு அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீனிவாசனுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது. அப்போது சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா, சீனிவாசனின் தாயார் இருவரும் அதைத் தடுக்க முயன்ற போது, அந்தக் கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

பின்னர் அந்த கும்பல் சீனிவாசனை காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சாந்திப்பிரியாவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சாந்திப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர்.

பின்னர் உடற்கூறாய்வுக்காக சாந்திப்பிரியா வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மிகவும் மெத்தனமாக உள்ளதாகக் கூறி, தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள்,கணவரின் உறவினர்கள் ஆலங்காயம் காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி, காவல்துறையிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது இறந்து போன சாந்திப்பிரியாவின் உறவினர்களுடன் திமுகவினர் சிலர் காவல் துறையினரை மிரட்டும் தொனியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவண்ணாமலை செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

திமுக பிரமுகர் கைது

காவல்துறையினர் சீனிவாசனின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பழனி, இளையராஜா ஆகிய மூன்று பேரைக் கைது செய்து, அவர்கள் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மேலும் நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், சாந்திப்பிரியாவை கீழே தள்ளிவிட்டதில் அவர் மயங்கி விழுந்து இறப்பதற்குத் தூண்டுதலாக இருந்த, இந்த வழக்கின் எட்டாவது குற்றவாளியான திமுக வேலூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் முனிவேல் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்து, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு..!

Intro:வாணியம்பாடி அருகே ஆந்திராவுக்கு ஆட்களை அழைத்து சென்று செம்மரம் வெட்டுவது தொடர்பான ஏற்பட்ட கூலி பிரச்சினையில் பெண் இறந்த வழக்கில் திமுக பிரமுகர் கைது
Body:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 35 இவருக்கும் ஒடுக்கத்தூர் பெண்ணாதுரை கிராமத்தை சேர்ந்த சாந்திப்பிரியா வயது 25 இருவருக்கும் திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.இவர்களுக்கு 6 வயதில் கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீனிவாசன் எனபவருக்கும் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர் மேலும் சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவருக்கு கூலி ஆட்களை அனுப்பி வைப்பது வழக்கம் .இந்நிலையில் கடந்த மாதம் பூங்குளம் பகுதியில் இருந்து சீனிவாசன் கிஷ்ணமூர்த்தி,பழனி, இளையராஜா, சென்றாயன், வெங்கடேசன் ஆகிய 7 பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்துள்ளார்.அவர்களை அசோகன் ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காக அழைத்து சென்று அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழகத்திற்கு கடத்தி வந்து அவற்றை விற்பனை செய்த பின்னர் கூலி வழங்குவதாக கூறி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது .ஆனால் 10 நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டும் கும்பல் 7 பேரும் சீனிவாசனிடம் கூலி வாங்கி தருமாறு வற்புறுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் சீனிவாசன் பணம் பெற்று தர தாமதமானதால் நேற்று இரவு அந்த 7 பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது சீனிவாசனுக்கு அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது.அப்போது சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா மற்றும் சீனிவாசனின் தாயார் இருவரும் அதை தடுக்க முயன்ற போது அந்த கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.பின்னர் அந்த கும்பல் சீனிவாசனை காரில் கடத்தி சென்றுள்ளனர்.பின்னர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சாந்திப்பிரியா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சாந்திப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருந்து விட்டதாக கூறிவிட்டனர்.பின்னர் பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் உயிரிழந்த சாந்திபிரியாவின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரும் இரண்டு அளித்த 2 புகாரின் பேரில் ஆலங்காயம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மிகவும் மெத்தனமாக உள்ளதாக கூறி தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் கணவரின் உறவினர்கள் ஆலங்காயம் காவல் நிலையம் முன்பு ஒன்று கூடி காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.அப்போது இறந்து போன சாந்திபிரியாவின் உறவினர்களுடன் திமுகவினர் சிலர் போலீசாரை மிரட்டும் தோனியில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டவர்களை வெளியேற்ற முயன்றனர்.ஆத்திரமடைந்த போராட்டக்கார்கள் ஆலங்காயம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் காவல் நிலையம் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்னர் போலீசார் சீனிவாசனின் வீட்டிற்குள் புகுந்து தகராறில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,பழனி,இளையராஜா ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது 147,148,294B ,323,324,302 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர் இந்த நிலையில் இந்த வழக்கில் சீனிவாசன் மற்றும் கடத்தல் கும்பல் சேர்ந்த இருதரப்பினரை சம்பவம் நடப்பதற்கு முன் சில தினங்களாக கட்டபஞ்சாயத்து செய்து வந்ததாகவும்,சீனிவாசன் வீட்டிற்கு சென்று கடத்தல் கும்பல் 7 பேர் தகராறில் ஈடுபட்டு சீனிவாசனின் மனைவி சாந்திப்பிரியாவை கீழே தள்ளிவிட்டதில் அவர் மயங்கி விழுந்து இறப்பதற்கு தூண்டுதலாக இருந்த இந்த வழக்கின் 8 வது குற்றவாளியான திமுக வேலூர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் முனிவேல் என்பவரை போலீசார் கைது செய்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வைத்து டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் 147,148,294B ,323,324,302 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.