வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே விபத்துகளை தடுக்கும் வகையில் காட்பாடி ரயில்வே பள்ளி மாணவர்கள் கையில் ரயில் விழிப்புணர்வு வாசகங்களடங்கிய பாதாகைகளை ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.
பின்னர், ஆளில்லாத ரயில்வே கேட்டை கடப்பது, ரயிலின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் மேற்கொள்ளுவது, ஓடும் ரயிலில் இருந்து இறங்குவது போன்ற செயல்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவது குறித்து மவுன மொழி நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முடிவில் ஆம்பூர் ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்திலிருந்த அனைத்து பயணிகளுக்கும் விழிப்புணர்வு வாசகங்களடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
கோடைகால விடுமுறையிலும் ரயில் விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய பள்ளி மாணவர்கள் அனைத்து தரப்பு மக்களின் வாழ்த்தினைப் பெற்றனர்.