ETV Bharat / state

பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

வேலூர்: குடிநீர் கேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குடிநீர் வேண்டி பொதுமக்கள் போராட்டம்
author img

By

Published : Jun 24, 2019, 6:14 PM IST

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் இந்தப் பகுதிக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், பொன்னை - ராணிபேட்டை வழித்தடத்தில் சென்ற இரண்டு பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வேண்டி பொதுமக்கள் போராட்டம்

இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் கலைந்து போகவில்லை. இதையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டயமாக அப்புறப்படுத்தியபோது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர், குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு மோதல்

Body:வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் திடீரென இன்று இரண்டு பேருந்துகளை சிறைபிடித்து பொன்னை to ராணிப்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த இராணிப்பேட்டை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கூறியபொழுது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு மோதல் ஏற்பட்டது. பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் சலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.