வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை அடுத்த ஒழுகூர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனவும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகீறது.
இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் காலி குடங்களுடன் வாலஜா- தலங்கை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து, அங்கு சென்ற வாலாஜாபேட்டை காவல்துறையினர்-வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.