ETV Bharat / state

அரசு அலுவலர்களின் அலட்சியம் - ஜோலார்பேட்டையில் குழாய் பதிப்பதில் சிக்கல் - ஜோலார்பேட்டை தண்ணீர்

வேலூர்: தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ரயில்வே அலுவலர்கள் ஒன்றிணைந்து செயல்படாததால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.

pipe
author img

By

Published : Jun 28, 2019, 7:21 PM IST

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க தமிழ்நாடு அரசு, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடி நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை துவங்க உத்தரவிட்டது.

அதன்படி ஜோலார்பேட்டை மேட்டுச்சக்கர குப்பம் என்ற இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நீரை கொண்டுவருவது பற்றி அலுவலர்கள், குடிநீர் வாரிய அலுவலர்கள், ரயில்வே அலுவலர்கள், பொறியாளர்கள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தினர். நீர்த்தேக்க தொட்டியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது. எனவே தண்ணீர் கொண்டுவர ராட்சத குழாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்காக தமிழ்நாடு அரசு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து ராட்சத குழாய்களை வாங்கியது. இந்த குழாய்கள் அனைத்தும் ஜோலார்பேட்டையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று குழாய்கள் பதிப்பதற்காக பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் துவங்க முடிவானது. ஆனால், ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அலுவலர்களிடம் கேட்ட போது, "பொது மக்களின் தண்ணீர் பிரச்னை தீர்க்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் தண்ணீர் எடுத்து வரக் கூடிய சாத்தியக் கூறுகளை தமிழ்நாடு அரசுதான் செய்து முடிக்க வேண்டும். அவர்கள் அனைத்து பணிகளையும் முடிக்கும் பட்சத்தில் உடனடியாக ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டுமா என்பது குறித்து தமிழ்நாடு அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த பணிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது, ரயில்வே அலுவலர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீர்த்தேக்கத் தொட்டியில் மட்டும் ஆய்வு மேற்கொண்ட பின், சென்றுவிட்டார். இது போன்று காரணங்களால் பணிகள் முடங்கி கிடக்கிறது. எனவே சென்னை மக்களின் நலன் கருதி அலுவலர்கள் ஒன்றிணைந்து உடனடியாக இந்த பணிகளை துவக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டையில் குழாய் பதிப்பதில் சிக்கல்

Intro:ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பதால் அதிகாரிகள் குழப்பம்

குழாய் பதிக்கும் பணிகளை துவங்குவதில் தாமதம்

Body:தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடுமையான தண்ணீர் பஞ்சம் நிறைவேறுகிறது இதை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் உபரி நீரை ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டனர். அதன்படி நாளொன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை நான்கு கட்டங்களாக எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது இதற்காக தமிழக அரசு ரூ 60 கோடி நிதி ஒதுக்கி உடனடியாக பணிகளை துவங்க உத்தரவிட்டது ஆனால் குழாய் பதிக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளதால் இந்த பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது அதாவது ஜோலார்பேட்டையில் மேட்டுச்சக்கர குப்பம் என்ற இடத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது மொத்தம் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அமைந்துள்ளது எனவே இந்த தொலைவிற்கு தண்ணீரை எப்படி எடுத்துச் செல்வது என்பதில் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது இதுதொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பொறியாளர்கள் பல்வேறு கட்ட ஆய்வு நடத்தினர் முதலில் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து ரயிலில் நிரப்ப முடியாது தேவைக்கேற்ப ரயில் நிலையம் அருகில் நீரை சேமித்து வைத்து தான் அனுப்ப முடியும் எனவே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தரை மட்ட நீர் தேக்கத் தொட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் உபரி நீரை கொண்டு வந்து நிரப்பி பின்னர் அங்கிருந்து ரயிலில் தண்ணீரை எடுத்து செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர் ஆனால் இடைப்பட்ட தூரத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து குழாய் பதிக்க வேண்டியிருந்ததால் சிக்கல் ஏற்பட்டது இதையடுத்து தண்டவாள சேவை பாதிக்காத வகையில் ஏற்கெனவே அங்கு உள்ள பழைய கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் அதன்படி மேட்டுச்சக்கர குப்பம் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராட்சத குழாய்கள் அமைத்து அதன் மூலம் ரயில் நிலையம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடிவு செய்துள்ளனர். அதற்காக தமிழக அரசு ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து ராட்சத குழாய்களை வாங்கியுள்ளது இந்த குழாய்கள் லாரிகள் மூலம் தற்போது ஜோலார்பேட்டையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த குழாய் பதிக்கும் பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது நேற்றைய தினமே குழாய் பதிப்பதற்காக பூஜைகள் போடப்பட்டு பணிகள் துவங்க முடிவு செய்தனர் ஆனால் ரயில்வே மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, "பொது மக்களின் தாகத்தை தீர்க்க கூடிய தண்ணீர் பிரச்சினை என்பதால் எங்கள் தரப்பில் நாங்கள் தயாராக உள்ளோம் ஆனால் தண்ணீர் எடுத்து வரக் கூடிய சாத்தியக் கூறுகளை தமிழக அரசுதான் செய்து முடிக்க வேண்டும் அவர்கள் அனைத்து பணிகளையும் முடிக்கும் பட்சத்தில் உடனடியாக ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஆயில் டேங்கர் மூலமாக தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் அந்த டேங்கர்களை சுத்தம் செய்யவேண்டும் தற்போது இங்கு அதை சுத்தம் செய்வதற்கான வசதி இல்லை எனவே சின்டெக்ஸ் டேங்க் மூலம் கொண்டு செல்ல வேண்டுமா அல்லது ஆயில் டேங்கர் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமா என்பது குறித்து தமிழக அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்தார் இதற்கிடையில் நேற்று மாவட்ட ஆட்சியர் ராமன் இந்த பணிகளை பார்வையிட்டார் அவர் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசுவதாக இருந்தது ஆனால் நேற்று அவர் ரயில் நிலையத்திற்கு செல்லாமல் நீர்த்தேக்கத் தொட்டியில் மட்டும் ஆய்வு நடத்தி முடித்து விட்டு சென்றுவிட்டார் இதன் காரணமாக அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு ஏற்படாமல் பணிகள் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது எனவே சென்னை மக்களின் நலன் கருதி அதிகாரிகள் ஒன்றிணைந்து உடனடியாக இந்த பணிகளை துவக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.