ETV Bharat / state

ஆவடியில் வாகனங்களின் பேட்டரிகளை குறிவைத்து கைவரிசை.. பலே கில்லாடி சிக்கியது எப்படி? - MAN ARRESTED FOR CAR BATTERY THEFT

ஆவடி அருகே வாடகை காரில் வந்து கனரக வாகனங்களின் பேட்டரிகளை திருடிய நபரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 60 வாகன பேட்டரிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகன பேட்டரிகள்
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகன பேட்டரிகள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2024, 5:22 PM IST

சென்னை: ஆவடி அருகே வாடகைக்கு கார் எடுத்து வந்து, கார் பழுது பார்க்கும் மெக்கானிக் கடைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் பேட்டரிகளை திருடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ள நபரை, சிசிடிவி காட்சிகளின் அடிப்படியில் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பேட்டரிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முத்தா புதுப்பேட்டை அடுத்த கிழ்கொண்டயார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அதே பகுதியில் விநாயக டிராக்டர் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது கடைக்கு கனரக வாகங்கள், டிராக்டர் போன்றவை வாகனங்கள் பழுது நீக்க வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடைக்கு வந்த டிராக்டர்கள், கனரக வாகனங்கள் பராமரிப்பு காரணமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

திருட்டில் ஈடுபடும் சிசிடிவி காட்சி (ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில், டிசம்பர் 12ஆம் தேதி வழக்கம்போல தொழிலுக்கு வந்த சுரேஷ் வாகனங்களை பழுது பார்த்து விட்டு இரவு அங்கேயே விட்டு விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கனரக வாகனம் டிராக்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்த பேட்டரி திருடு போயிருந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேட்டரி திருடனை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், வேளச்சேரியைச் சேர்ந்த யாஷின் முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கார், கைது செய்யப்பட்ட நபர்
பறிமுதல் செய்யப்பட்ட கார், கைது செய்யப்பட்ட நபர் (ETV Bharat Tamil Nadu)

அதாவது, பட்டாபிராம், சோழவரம், செங்குன்றம், முத்தா புதுப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனரக வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் உள்ள வாகனத்தினை நோட்டமிட்டு இரவு நேரத்தில் வாடகை காரை எடுத்துக் கொண்டு வந்து பேட்டரிகளை திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். மேலும் கனரக வாகனத்தின் பேட்டரிகள் பெரிய அளவில் இருக்கும் என்பதால், அதனை திருடிக்கொண்டு சென்று கிடைக்கும் விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்தும் யாஷின் முகமதுவிடமிருந்து 60 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பேட்டரி திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றுள்ளன. மேலும், டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காரில் வந்து பேட்டரிகளை திருடி பின்பக்க இருக்கை முன்பக்க இருக்கையில் வைப்பதும், அவ்வழியே இருசக்கர வாகனம் லாரி போன்றவை செல்லும் நேரத்தில் கார் பின்புறம் பக்கவாட்டில் ஒளிந்து கொண்டு பின்னர் பேட்டரிகளை எடுத்து வைப்பதும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

அதன் பின்னர், தேவையான பேட்டரிகளை திருடி விட்டு எதுவும் தெரியாதது போன்று காரில் செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பட்டா மாறுதல் பெற லஞ்சம் வாங்கிய ஆவடி சார் ஆய்வாளர்.. கையும் களவுமாக சிக்கி சிறை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.