ETV Bharat / state

அரசு பள்ளிகள் தத்துக் கொடுப்பா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - GOVERNMENT SCHOOL ADOPTION ISSUE

அரசு பள்ளிகள் என்பது எங்களது பிள்ளைகள் என்றும் அவற்றை நாங்கள்தான் வளர்த்து எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (credit - @Anbil_Mahesh X account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 3:33 PM IST

Updated : Jan 2, 2025, 6:28 PM IST

சென்னை: சட்டமன்றத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை மற்றும் எதிர் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, '' பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை தொடங்கிய 100 சிறுவர்களில் 99 பேர் 2019 உயர்நிலைப் படிப்பை முடித்தனர். இது 2024 இல் 100 ஆக உயர்ந்துள்ளது. பெண்களில் இந்த எண்ணிக்கை 97.5 சதவீதத்தில் இருந்து 100 ஆக உயர்ந்துள்ளது. மேல்நிலைப் பள்ளியில் ஆண்களின் சதவீதம் 81.3 லிருந்து 89.2 சதவீதமாகவும், பெண்களின் சதவீதம் 89.4 சதவீதத்தில் இருந்து 95. 6 ஆக உயர்ந்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, அதன் செயல்பாடுகள், வரும் ஆண்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்தோம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamilnadu)

அரசு பள்ளிகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி தவறானது. தனியார் பள்ளிகள் சங்க நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியுள்ளேனா என்பதை தெரிந்துக் கொள்ளாமல் வெளியிடப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உறுதிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கான நிதியை, கொள்கைகளை விட்டுக் கொடுத்து ஒன்றிய அரசிடம் பணத்தை வாங்க வேண்டாம் என முதலமைச்சர் தெரிவித்தார். பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கூடுதல் நிதி சுமையை ஏற்றுள்ளது.

விளக்கம் அளித்து சோர்வடைகிறோம்

செய்திகளை வெளியிடும் போது ஒவ்வொரு முறை விளக்கம் அளித்து சோர்வடைகிறோம். பள்ளிக் கல்வித் துறை என்பது எங்கள் பிள்ளை.. நாங்கள்தான் வளர்த்து எடுக்க வேண்டும். இதை யாருக்கும் தத்து கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கல்வியை மாநில பட்டியலுக்கு கொடுத்து விடுங்கள், எங்களது பிள்ளைகளை நாங்களே வளர்த்துக் கொள்கிறோம்.

கழிவறையை மேம்படுத்த பயன்படுத்தப்படும்

அனைவருக்கும் இடைநிலைக் கல்விக்கான மத்திய அரசின் நிதி வராத பட்சத்தில் திட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பது தமிழ்நாடு அரசுக்கு விடுக்கும் மிரட்டலாகத்தான் பார்க்கிறோம். நம் பள்ளி நம் பெருமை திட்டத்தின் கீழ் 540 கோடி சிஎஸ்ஆர் நிதி வந்துள்ளது. தற்போது வரை 350-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இனி வரும் நிதி பெண் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் கழிவறையை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.

அண்ணாமலை ஆராய வேண்டும்

தேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு தகவல் வந்தால் அதில் உண்மை தன்மை உள்ளதா என்பதை ஆராயாமல் எக்ஸ் தளத்தில் பதிவிடுவது சரியா..? தேசிய கட்சியின் தலைவர் ஒரு பதிவை உறுதிப்படுத்தாமல் பதிவிட்டால் மற்றவர்கள் கிண்டலடிக்க மாட்டார்களா..? 44 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ள இரண்டு மாதத்தில் மானிய கோரிக்கையை அறிவிக்கிறேன்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஓடாத வண்டியாக இருந்த பள்ளிக் கல்வித் துறை தற்போது இந்த மூன்று ஆண்டுகளில் வண்டியை நகர்த்தி வருகிறோம். பழைய படத்தில் வருவது போல வண்டியை தள்ளு தள்ளு என குரல் மட்டும் கொடுக்கக் கூடாது.. அந்த வண்டி எப்படி செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வார்த்தையால் விளையாட கூடாது'' என தெரிவித்தார்.

Last Updated : Jan 2, 2025, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.