ETV Bharat / state

கழுதைகள் உதவியுடன் பொங்கல் பரிசு விநியோகம்! - நெக்னாமலை பொங்கல் பரிசு

திருப்பத்தூர்: வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலைக் கிராமத்திற்கு கழுதைகள் உதவியுடன் பொங்கல் பரிசு விநியோகிக்கப்பட்டது.

pongal
pongal
author img

By

Published : Jan 8, 2020, 4:02 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்திற்குப் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. மேலும், மக்கள் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால், நெக்னாமலையில் இருந்து மலையடிவாரம் வரை ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, பின்னர் அருகே உள்ள கிரிசமுத்திரம் பகுதியில் இருக்கும் அரசு நியாய விலை கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

தற்போது திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரித்த பின்னர், புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள் உத்தரவின் பேரில் அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு, வேட்டி, சேலை, ஆயிரம் ரூபாய் பணத்தையும் சேர்த்து, பொங்கல் பரிசுத் தொகுப்புகளை முதல் முறையாக கிராமத்திற்கே சென்று அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பொருட்களை மலையடிவாரத்திற்கு கொண்டுவந்து, அவற்றை சிறு சிறு மூட்டையாக கட்டி 12 கழுதைகள் மீது ஏற்றி, மலையடிவாரத்திலிருந்து சாலை வசதி இல்லாத நெக்னாமலைக்கு எடுத்துச்சென்றனர்.

கழுதைகள் மூலம் பொங்கல் பரிசு விநியோகம்

பின்னர் கிராமத்தில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுப் பொருட்களை, அரசு அலுவலர்கள் விநியோகம் செய்தனர். இதனால் மலைக் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடம் திறந்துவைப்பு!

Intro:வாணியம்பாடி அருகே பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வரும் கிராம மக்களுக்கு முதல் முறையாக பொங்கல் பரிசினை கழுதைகள் மூலம் எடுத்துச் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம்Body:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்ணாமலை கிராமத்திற்கு பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை.மேலும் நியாய விலை கடைக்கு ரேசன் பொருட்கள் வாங்கவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு வாங்குவதற்கு நெக்கனாலையில் இருந்து மலையடிவாரம் வரை 7கிலோ மீட்டர் நடந்தே வந்து பின்னர் கிரிசமுதிரம் பகுதியில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று பெற்றுக்கொண்டு இருந்தனர்.தற்போது திருப்பத்தூர் மாவட்டம் பிரித்த பின்னர் புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் ஆணைக்கு உத்தரவின் பேரில் அரிசி,சர்க்கரை,முந்திரி,திராட்சை,கரும்பு, வேட்டி, சேலை உடன் ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை
முதல் முறையாக
வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் வட்ட வழங்கல் அலுவலர் குமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் பொருட்களை மலையடிவாரத்தில் கொண்டுவரப்பட்டு அங்கு அரிசி,சர்க்கரை,முந்திரி,திராட்சை,கரும்பு உடன் ரூ.1000 தொகையை சேர்த்து அடங்கிய பொங்கல் பரிசுகளை சிறு சிறு மூட்டையாக கட்டி 12 கழுதைகள் மூலமாக மலையடிவாரத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் சாலை வசதி இல்லாத நெக்கனாலை மலைக் கிராமத்தில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க
முதல் முறையாக எடுத்து செல்லப்பட்டது. இதனால் மாலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.