ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரி மலையில் சுற்றுலாத்தலம் உள்ளது. இந்தச் சுற்றுலாத்தலத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில், அங்கு கொலை குற்றச் சம்பவங்கள் நடந்தேறிவருகிறது. சமீபத்தில் ஏலகிரி மலையில் உள்ள தொழிலதிபரை கடத்திச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல் நிறைய சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், உணவு விடுதி, தங்கம் விடுதி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சங்கத்தின் மூலம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, மலைப்பகுதியில் ஆங்காங்கே 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலிடம் உணவு விடுதி, தங்கும் விடுதி சங்கத்தின் மூலம் ஒரு லட்சம் ரூபய் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:
யாரும் இல்லை என நினைத்து டேபிள் திருடிய நபர்; காட்டிக்கொடுத்த நிழல்!