காட்பாடி: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஐபிஎஸ், உத்தரவின் பேரில் சட்டவிரோதமான மது பாட்டில்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று பேரணாம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தேவபிரசாத் தலைமையில் இளங்கோவன் உள்ளிட்ட போலீசார் பேரணாம்பட்டு வி.கோட்டை சாலை பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, வல்லதாரசு என்பவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 10,000 மதிப்புள்ள பீர், பிராந்தி உள்ளிட்ட 37 பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'இளையராஜாவை வைத்து அரசியல்.. கனவு காணும் பாஜக' - திருமாவளவன்