ETV Bharat / state

'வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் நெகிழியை ஒழிக்க முடியாது' - Plastic cannot be eradicated only by action on the merchants

வேலூர்: நெகிழி ஒழிப்பைப் பொறுத்தவரை வியாபாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல், நாடு முழுவதும் தடைசெய்தால்தான் சாத்தியமாகும் என வணிகர் சங்க மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

Vanigar Sangam vikrama raja
Vanigar Sangam vikrama raja
author img

By

Published : Jan 4, 2020, 8:26 AM IST

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடசுப்பு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, "உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வணிகர்களை மிரட்டி லஞ்சம் பெறுவதிலேயே குறியாக உள்ளனர். பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

இணையதள வர்த்தகத்தால் சில்லறை வணிகத்தில் இந்திய வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு இணையதள வர்த்தகத்தை தடைசெய்யக்கோரி வரும் 6ஆம் தேதி டெல்லியில் கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்கவுள்ளோம்.

வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

நெகிழி ஒழிப்பைப் பொறுத்தவரை வியாபாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல. நாடு முழுவதும் நெகிழியை தடைசெய்ய வேண்டும், அப்போதுதான் அது சாத்தியமாகும். இதைக் காரணம்காட்டி வணிகர்களின் கடைக்குச் சீல்வைப்பது சரியானதல்ல. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அரசிடம் எங்களின் கோரிக்கையை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்வரை அபராதமோ மேல் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி பயன்படுத்தினால் அபராதம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...விவசாயிகள் எதிர்ப்பு!

Intro:வேலூர் மாவட்டம்

சோதனை என்ற பெயரில் வணிகர்களை மிரட்டி லஞ்சம் பெறுகின்றனர் - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது விக்கிரமராஜா குற்றச்சாட்டுBody:வேலூர் மாவட்டம் வேலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க மாநில தலைவர் வெங்கடசுப்பு வி,ஐடி வேந்தர் விசுவநாதன் மற்றும் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த திரளான வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர் இந்த கூட்டத்திற்கு பின்னர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது வணிகர்களை மிரட்டி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் குறிப்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் சோதனை நடத்தி எங்களை துன்புறுத்திகிறார்கள் ஆனால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை ஜி.எஸ்டி வரி விதிப்பில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது எனவே இதுகுறித்து மத்திய அரசிடம் எங்களின் கோரிக்கையை எடுத்து சொல்லியிருக்கிறோம் அதில் நடவடிக்கை எடுக்கும் வரை அபராதமோ மேல் நடவடிக்கையோ எடுக்க கூடாது ஆன் லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகத்தில் இந்திய வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே மத்திய அரசு ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி வரும் 6 ஆம் தேதி டெல்லியில் கூடி அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிக்க இருக்கிறோம் பிளாஸ்டிக் ஒழிப்பில் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஏற்புடையதல்ல நாடு முழுவதும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் அப்போது தான் அது சாத்தியமாகும் இதை காரணம் காட்டி வணிகர்களின் கடையை சீல் வைப்பது சரியில்லை என கூறினார்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.