திருப்பத்தூர் மாவட்டத்தை வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்த பின்னர் பல்வேறு கிராமங்களை வெவ்வேறு ஊராட்சிகளில் சேர்த்தது தொடர்பாக பல்வேறு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாதனூரை அடுத்துள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியானது பல ஆண்டுகளாக மாதனூர் ஊராட்சியில் இருந்தது. பின்னர் வேலூர் மாவட்டத்தை பிரித்தப் பின்னர் கூத்தம்பாக்கம் ஊராட்சி வேலூர் மாவட்டத்தில் சேர்ந்ததால் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து கூத்தம்பாக்கம் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குடியாத்தம் ஊராட்சியில் இணைக்கப்பட்டது.
இதனால் இத்தனை ஆண்டுகளாய் நடந்தோ அல்லது மிதிவண்டியிலோ மாதனூர் சென்ற மக்கள் தற்போது 30 கிலோ மீட்டர் தொலைவிற்குச் செல்ல மிகுந்த சிரமத்திற்குள்ளாகியும், குடியாத்தம் செல்வதற்கு பேருந்து வசதிகள் அடிக்கடி இல்லாததாலும், தங்கள் கிராமத்தை வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என அக்கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாமில் மாநில அளவிலான கபடிப் போட்டி