ETV Bharat / state

சுரீர் என சுட்டெரிக்கும் வெயில்... பழ ரசத்தை நாடிச் செல்லும் மக்கள்!

வேலூரில் சுரீர் என சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தீர்க்க பொதுமக்கள் பழ ரசத்தை நாடிச்சென்று அருந்தி வருகின்றனர்.

Etv Bharat சுரில் என சுட்டெரிக்கும் வெயில்.

author img

By

Published : Apr 21, 2023, 3:52 PM IST

சுரீர் என சுட்டெரிக்கும் வெயில்

வேலூர் என்று சொன்னாலே பல்வேறு வரலாற்றுச் சிறப்பம்சம் கொண்ட ஒரு நகரம் ஆகும். சிப்பாய்க் கலகம் முதல் தேசியக்கொடி உருவாகிய இடம், அகழியுடன் உள்ள கோட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம். வேலூரில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு வரலாற்றுஸ் சிறப்புகள் கொண்ட மாவட்டம் தான், வேலூர் மாவட்டம். இருப்பினும், வரலாற்றுச் சிறப்பு மட்டும் அல்லாமல், வெயிலுக்கும் பெயர் போன ஊராகத் திகழ்கிறது, வேலூர். அதனை தான் வெயிலூர் என்று மற்றொரு பெயரிட்டு அழைப்பார்கள்.

பொதுவாகவே வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே மாத காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், வேலூரில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. எப்போதுமே அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கக்கூடிய மாநகரமான வேலூரில், இந்த ஆண்டின் பருவ மழை பொய்த்து போனதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. வேலூரில் கடந்த சில நாட்களாக 102 டிகிரி, முதல் 105 டிகிரி என தினமும் வெப்பத்தின் அளவு படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகின்றது.

பகல் நேரங்களில், அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், வீட்டின் உள்ளே அனல் காற்றும் புழுக்கமும் அதிகரிக்கிறது. இதனால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வெயிலில் வேலை பார்க்கும் மக்கள் என பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

அதேபோல் வேலூரில் தர்பூசணி, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று இளைப்பாறவும் நமது உடம்பில் நீர் குறையும்போது தர்பூசணி சாப்பிடுவதால், நீர்ச்சத்து கிடைக்க உதவுகிறது.

தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீர் நிரம்பி உள்ளதால் தாகத்தை தணிக்கிறது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், ஒரு துண்டு 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இளநீர், பப்பாளி, வெள்ளரி, ஜூஸ், கரும்புச் சாறு, பனங்காய் நுங்கு, பழ வகைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல் வீட்டிலேயே மக்கள் முடங்கிக் கிடப்பதால் தங்களின் பொழுதைப் போக்க கேரம்போர்டு, தாயம், சீட்டு போன்றவை விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தால் தோல் நோய் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்றும்; வெயில் நேரத்தில் அதிகளவில் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் வெளியே வரவேண்டாம் எனவும்; அதிக தண்ணீர் பருகவேண்டும் என்றும், குளிர்ச்சியான பழ வகைகளை உட்கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

மேலும், கத்திரி வெயில் அடுத்த மாதம் தொடங்குவதால் காலை 11 மணி முதல் 3 மணி வரை சிறியவர்கள், பெரியவர்கள் நோயாளிகள் யாரும் வெளியில் வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும் மாவட்ட நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

அதேபோன்று ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்தபோது கோடைகாலத்தை கொண்டாடும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரியில் அரசு விழா நடைபெறும். ஆனால், மாவட்டம் பிரிந்த பிறகு வேலூருக்கான கோடைகால அரசு விழா புகழ்பெற்ற அமர்தியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் பெரிய அளவில் நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாத தாக்குதல் - 5 வீரர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.