இந்திய நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொள்வார்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனை முன்னிட்டு இன்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகை, நடன ஒத்திகை, காவலர்களின் அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது.
பள்ளி மாணவ - மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சி ஒத்திகையை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதையும் பாருங்கள்: குடியரசு தினம் - அனல் பறக்கும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு!