ETV Bharat / state

3 நாட்களில் 2 கொலை - அதிர வைக்கும் வேலூர் சம்பவங்கள்

வேலூர்: முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளியை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

No one arrested after 2 murders in vellore

author img

By

Published : Jan 15, 2020, 10:47 PM IST

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பரத்(35). இவர் வேலூர் சாரதி மாளிகை விசிக ஆட்டோ ஸ்டேண்ட் தலைவராக உள்ளார். இந்நிலையில் பரத்துக்கும் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த மைக்கேல்(27) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று காலை சேண்பாக்கம் பகுதியில் பரத்துக்கும், மைக்கேலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பரத்தை ராடால் தலையில் தாக்கியுள்ளார் மைக்கேல், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடைத்திலேயே பரத் உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த மைக்கேல் தப்பியோடியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர், உடலைக் கைபற்றி உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மைக்கேலை தேடி வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில், மைக்கேலும், உயிரிழந்த பரத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட பரத்தின் வீட்டுக்கு இன்று திறப்பு விழா நடைபெற இருந்ததாகவும் தெரிவித்தனர்.

3 நாட்களில் 2 கொலை - அதிர வைக்கும் வேலூர் சம்பவங்கள்

வேலூர் மாநகரில் கடந்த 3 நாட்களில் நடைபெறும் 2ஆவது கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கொலைகள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Intro:வேலூரில் முன்விரோதம் காரணமாக வாலிபர் அடித்துக்கொலை. கொலையாளியை காவல் துறையினைர் தேடிவருகின்றனர். 3 நாட்களில் 2 கொலை.
Body:வேலூர் மாவட்டம்.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் பரத்(35). இவர் வேலூர் சாரதி மாளிகை விசிக ஆட்டோ ஸ்டேன்டு தலைவராக உள்ளார். இந்நிலையில் பரத்துக்கும் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த மைக்கல்(27) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று காலை சேண்பாக்கம் பகுதியில் பரத்துக்கும், மைக்கலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பரத்தை ராடால் தலையில் தாக்கியுள்ளார் நிலைதடுமாறி கீழே விழுந்த பரத் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்துள்ளார். கொலை செய்த மைக்கல் தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திர்க்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இக்கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு தப்பியோடிய மைக்கலை தேடி வருகின்றனர். காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் மைக்கலும்-உயிரிழந்த பரத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகளுடன் தாகாத உறவு வைத்திருந்ததாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் கொலைசெய்யப்பட்ட பரத்தின் வீட்டிர்க்கு இன்று திறப்பு விழா நடைபெற இருந்ததாகவும் தெரிவித்தனர்.

வேலூர் மாநகரில் கடந்த 3 நாட்களில் நடைபெறும் 2-வது கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கொலைகள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.