ETV Bharat / state

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு..! - திருப்பத்தூரில் புதிய மாவட்டக் கண்காணிப்பாளர் பதவியேற்பு

வேலூர்: திருப்பத்தூர் புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் பதவியேற்றுக் கொண்டார்.

vellore new dgp
author img

By

Published : Nov 18, 2019, 3:39 AM IST

வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மூன்று ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகணன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நேற்று(நவ.17) பதவியேற்றுக்கொண்டார். வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்காளர் பிரவேஷ்குமார் ஒருவாரம் விடுமுறையில் இருப்பதால் வேலூர் மாவட்டத்தையும் விஜயகுமார் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டக் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள விஜயகுமார், முன்னதாக தஞ்சாவூர், கிருஷ்ணகிரியில் இணை காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

பதவியேற்றுக் கொண்ட பின்னர் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்களை நேரில் சந்தித்து குற்றங்களை தடுக்க துரிதமாக செயல்பட வேண்டும் என ஆணையிட்டார்.

காவல் நிலையங்களின் எல்லை வரையறைகள் குறித்தும் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைய செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். பணி தொடர்பான எந்த சந்தேகங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் 24 மணிநேரம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும்இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:வேலூர் மாவட்டம்

திருப்பத்தூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார்Body:வேலூர் மாவட்டம், வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களாக பிரிக்கபரபட்டுள்ளது. இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் இன்று பொறுப்பேற்றார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்காளர் பிரவேஷ்குமார் ஒருவாரம் விடுமுறையில் இருப்பதால் வேலூர் மாவட்டத்தையும் விஜயகுமார் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். எனவே வேலூர. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று அவர் பதவியேற்றார். இவர் இதற்கு முன்பு விஜயகுமார் தஞ்சாவூரில் இணை காவல் கண்காணிப்பாளராகவும் ,கிருஷ்ணகிரில் இணை காவல் கண்காணிப்பாளராகவும் பின்னர் ஏற்கனவே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் இருந்துள்ளார் தற்போது பதவியேற்று கொண்ட பின்னர் விஜயகுமார் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்களை நேரில் சந்தித்து குற்றங்களை தடுக்க துரிதமாக செயல்படவும் மேலும் காவல் நிலையங்களின் எல்லை வரையறைகள் குறித்தும் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைய செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், பணி தொடர்பான எந்த சந்தேகங்களுக்கும் ஆலோசனைகளுக்கு 24 மணிநேரம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என போலீசாரிடமல கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.