ETV Bharat / state

Vellore - வேலூர் கோட்டையில் தேசியப் பேரிடர் மீட்புப்படையினரின் ஒத்திகை நிகழ்வு

author img

By

Published : Dec 28, 2021, 5:48 PM IST

பேரிடர் காலங்களில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை எவ்வாறு மீட்பது என்று தேசியப் பேரிடர் மீட்புப் படையினரின் ஒத்திகை நிகழ்வு இன்று வேலூர் கோட்டையில் நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்பு படையினரின் ஒத்திகை நிகழ்வு இன்று வேலூர் கோட்டையில் நடைபெற்றது

வேலூர்: 'ஆசாதி கா அம்ரித் மகா உட்சவ்(Azadi Ka Amrit Mahatsov)' என்ற பெயரில் ஒன்றிய அரசாங்கம் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் பல்வேறு விதமாக கொண்டாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க இடங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தும் விதமாகவும் பேரிடர் காலங்களில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை எவ்வாறு மீட்பது என்ற தேசிய பேரிடர் மீட்புப்படையினரின் ஒத்திகை நிகழ்வு இன்று(டிச 28) நடைபெற்றது.

தேசியப் பேரிடர் மீட்புப்பணியினர் ஒத்திகை:

வேலூர் கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். அரக்கோணம் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்காவது பட்டாலியனைச் சேர்ந்த ஆய்வாளர் ரோகித் குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் இந்த ஒத்திகையை நிகழ்த்திக் காண்பித்தனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படையினரின் ஒத்திகை நிகழ்வு இன்று வேலூர் கோட்டையில் நடைபெற்றது

தற்போது, வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இது போன்ற சமயங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதும் ஒத்திகையில் காண்பிக்கப்பட்டது.

’பொதுவாக இது போன்ற பேரிடர் காலங்களில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க முயற்சி செய்வர்.

இருவராலும் மீட்க முடியாத பட்சத்தில் தேசியப் பேரிடர் மீட்புப்படையினருக்குத் தகவல் கொடுக்கப்படும். உடனடியாக படையினர் நேரில் சென்று தங்களிடம் உள்ள தொழில்நுட்பங்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்போம்’ என்று தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்த்த அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:Omicron spreads:புதுச்சேரியில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.