ETV Bharat / state

'எங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்றுங்கள்' - டிஜிபிக்கு நளினி மனு - சென்னை புழல் சிறை

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருக்கும் நளினி, தன்னையும், தன் கணவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற சிறைத்துறை காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு மனு அளித்துள்ளார்.

nalini want_transfer_petition
nalini want_transfer_petition
author img

By

Published : Feb 27, 2020, 9:46 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருக்கும் நளினி, தன்னையும் ஆண்கள் மத்திய சிறையிலிருதக்கும் தனது கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறை காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அதில் அவர், சென்னையில் தங்களது பெற்றோர் வயது முதிர்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்களைக் கவனித்துக்கொள்ள ஏதுவாக தங்களை வேலூர் மத்திய சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலூர் பெண்கள் சிறை

ஏற்கனவே நளினி வேலூர் ஆண்கள் சிறையில் தனது கணவரைக் காவல் துறையினர் தனிமைப்படுத்தி சித்திரவதை செய்ததாகவும், அவரது உயிருக்கு ஆபத்திருப்பதாகவும் நளினி தமிழ்நாடு அரசிடம் மனு அளித்து, அதில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தங்களைக் கருணை கொலை செய்யும்படியும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிறையில் நளினி 4ஆவது நாளாக உண்ணாவிரதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.