ETV Bharat / state

இரண்டு நாள்களாக கன மழை: வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

author img

By

Published : Jul 9, 2021, 5:59 PM IST

வேலூர் ஜவ்வாது மலைப்பகுதியில் தொடர்ந்து இரண்டு நாள்களாக பெய்து வந்த கனமழையால், அமிர்தி நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

Naganadi Kattaru river ground bridge was washed away by the flood waters  Naganadi Kattaru river ground bridge was washed away  heavy rain  கன மழை  வெள்ளத்தால் அடித்துச் சென்ற தரைப்பாலம்  வெள்ளத்தால் அடித்துச் சென்ற அமிர்தி நாகநதி ஆற்றின் தரைப்பாலம்  அமிர்தி நாகநதி ஆறு  வேலூர் செய்திகள்  vellore news  vellore latest news
அடித்துச் சென்ற தரைப்பாலம்

வேலூர்: ஜவ்வாது மலை அடிவாரத்தில், அமிர்தி - ஜமுனாமரத்தூர் மலைப் பகுதியை இணைக்கும் தரைப்பாலத்தில் பழுது ஏற்பட்டதன் காரணமாக அதனை உடைத்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக மக்கள் ஆற்றைக் கடந்து செல்வதற்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்து இரண்டு நாள்களாக ஜவ்வாது மலைப் பகுதியில் கன மழை பெய்து வந்ததை அடுத்து, ஜவ்வாது மலைப் பகுதியின், அடிவாரமான அமிர்தி நாகநதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

இப்பாலம் அமிர்தி வன உயிரியல் பூங்கா உள்பட ஜமுனாமரத்தூர், நிம்மியம்பட்டு, மேல்நிம்மியம்பட்டு, அரசுவெளி, வீரப்பனூர், மண்டபாறை, கனகநேரி என சுமார் 15க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்குச் செல்லும் முக்கிய வழியாகும்.

மேலும் மலை கிராம பொதுமக்கள், பணியாளர்கள், அந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மலைவாழ் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏமன் நாட்டிற்கு சட்டவிரோதமாக சென்ற இருவர் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.