ETV Bharat / spiritual

முதலீடு செய்வதில் கவனம் தேவை.. எந்தெந்த ராசிக்காரர்களுக்குத் தெரியுமா? - இந்த வார ராசிபலன்! - Weekly Horoscope in tamil - WEEKLY HOROSCOPE IN TAMIL

செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரையிலான 12 ராசிகளுக்கான வார ராசிபலனைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 7:43 AM IST

மேஷம்: இந்த வாரம் பணியிடத்தில் வெற்றி மற்றும் ஒத்துழைப்பின் காலகட்டமாக இருக்கும். நீங்கள் பேசும் விதம் சக்திவாய்ந்ததாகவும் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் வாக்கு வன்மை மிக்கதாகவும் இருக்கும். இதனால் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் உங்கள் பணிகளை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.

நீங்கள் பெரிய முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உறவினர்கள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடிச் சோர்ந்து போயிருப்பவர்களுக்கு இந்த வாரம் அவர்கள் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கும்.

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வாரத்தின் 2ம் பகுதியில் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். இது எதிர்காலத்தில் லாபகரமான திட்டங்களை உருவாக்க உங்களுக்கு உதவும். காதல் உறவுகளின் பார்வையில் இந்த வாரம் மங்களகரமானதாக இருக்கும். ஏற்கனவே காதல் உறவில் உள்ளவர்கள் இனிமையான நேரத்தைச் செலவிடுவார்கள். திருமண வாழ்க்கையில் அன்பும், நல்லிணக்கமும் இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

ரிஷபம்: இந்த வாரம் பணியிடத்தில் உங்கள் முயற்சி மதிக்கப்படும். பெரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமன்றி புதியவர்களிடமிருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், நீங்கள் சில நல்ல விஷயங்களுக்காகவும், கூடுதலாக சில விஷயங்களுக்காகவும் அதிக செலவு செய்யலாம். இதனால் உங்கள் நிதிநிலைமை உங்களுக்கு தலைவலியைக் கொடுக்கலாம். வார இறுதியில், எந்தவொரு பெரிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன் விஷயங்களைப் பற்றி சற்று சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.

நிலம், கட்டடங்கள் மற்றும் குடும்ப சொத்துப் பிரச்சினைகள் இப்போது தலை தூக்க ஆரம்பிக்கலாம். நீங்கள் வியாபாரிகளுடன் தொடர்பில் உள்ளீர்கள் என்றால், பணத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் புத்திசாலித்தனமாக இருங்கள். உங்கள் பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் எனக் கருதினால் சிறிய எழுத்துக்களில் அச்சிட்டுள்ளதைக் கவனமாகப் படிக்க வேண்டும். நீங்கள் பின்னர் சிக்கலில் சிக்கக்கூடும். உங்கள் காதல் வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும். மேலும், உங்கள் காதல் துணையுடன் நீங்கள் ஒரு சிறந்த நேரத்தைச் செலவிடுவீர்கள். கல்யாண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: வாரத்தின் தொடக்கத்தில் உத்யோகம் அல்லது வியாபார நிமித்தமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கலாம். ஆனால், நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவழிக்க நேரிடும். இந்த வாரம் வேலை தேடுபவர்கள் அல்லது தொழில் வாழ்க்கையில் மாற்றத்தை கருத்தில் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த நேரம்.

காதல் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படலாம். திருமணமானவராக இருந்தால், உங்கள் மனைவியின் உடல்நலம் குறித்து நீங்கள் கவலைப்படலாம். இந்த வாரம் உங்கள் வாழ்க்கையானது உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். பேச்சு வார்த்தைகள் மூலம் விஷயங்களை சமாளிக்கவும் மற்றும் உங்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

கடகம்: வியாபாரம் இந்த வாரத்தில் உங்களுக்குப் பலன்களை வழங்கும். நீங்கள் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டை ஒப்பந்தம் செய்ய நினைத்தால், இந்த வாரத்தில் அதை விரைவில் செய்ய முயல்வீர்கள். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான பயணம் இனிமையாகவும், வெற்றிகரமாகவும் இருக்கும். வெளிநாட்டில் தொழில் செய்ய முயற்சிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது.

காதல் உறவைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் உங்கள் காதல் உறவை ஆசீர்வதிக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் மனைவியுடன் சில பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், உங்கள் குடும்பத்தினரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

சிம்மம்: நீங்கள் உங்கள் வேலையைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகிறது. மேலும், நீங்கள் விரும்பிய பதவி உயர்வையும் பெறலாம் அல்லது புதிய இடத்திற்கு மாற்றலாகிச் செல்லலாம். தொழில் மற்றும் வணிகத்தில் சில புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் கால கட்டம்.

உங்களுக்கு உதவவும், கை கொடுக்கவும் உங்கள் நண்பர்கள் இருப்பார்கள். நீங்கள் பெரிய தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் போது உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் அப்பா எப்போதும் உங்களுக்கு பின்புலமாக இருந்து ஆதரவளிப்பார்.

வார இறுதியில், தேவாலயம் மற்றும் சமூக விஷயங்களில் பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுடன் சிறிது நேரத்தைக் கழிப்பீர்கள் அது கொஞ்சம் மரியாதையை அளிக்கும். இந்த வாரம் காதல் விஷயங்களுக்கு சிறப்பான நாள். காதல் துணையுடன் உங்களுக்கு ஏதேனும் பிணக்குகள் இருந்தால், அந்த விஷயங்களைச் சரி செய்யவும். அதனால் உங்கள் உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மறக்க முடியாத சில சிறந்த தருணங்களை உருவாக்கவும், உங்கள் திருமணத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி: ஒரு பெரிய தடையாக இருந்த ஒன்று இந்த வாரத்தில் முடிவுக்கு வரும். முதல் சில நாட்கள் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டமாக இருக்கும். முதலாளிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து நீங்கள் நிறைய உதவிகளைப் பெறுவீர்கள். அதாவது உங்கள் பயணங்கள் மற்றும் பணி திட்டங்கள் சீராகச் சென்று நல்ல முடிவுகளை தரும்.

வாரம் செல்ல செல்ல, நீங்கள் தெய்வீக காரியங்களில் அதிகம் ஈடுபடுவீர்கள். மேலும், ஒரு புனிதமான இடத்திற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடலாம். ஆனால், பருவகால அல்லது தற்போது உலவிக் கொண்டிருக்கும் நோய்கள் போன்ற சில உடல் உபாதைகளையும் சமாளிக்க வேண்டி இருக்கலாம். எனவே உங்களைக் கவனித்துக் கொள்வது முக்கியம்.

காதல் விஷயங்களுக்கு இந்த வாரம் சற்று சொதப்பலாகத்தான் இருக்கும். உங்கள் மனத்தைக் கவர்ந்தவருடன் சில தரமான நேரத்தை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், வாழ்க்கையின் சிக்கல்களை நீங்கள் சமாளிக்கும்போது அவர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். உங்கள் திருமண உறவு வலுவாக இருக்கும்.

துலாம்: இந்த வாரம் சற்று சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கும். உத்யோகம் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இது ஆரோக்கியத்தையும், நேரத்தையும் சரியாக கையாளுவதைப் பொறுத்தது. வாய்ப்புகளை நீங்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உங்கள் நல்வாழ்வையும், உங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணிப்பது சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது முக்கியம். வாரத்தின் நடுப்பகுதியில், உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய சில நிலம் மற்றும் கட்டட சிக்கல்களைச் சந்திக்கலாம். ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஆதரவளிக்க உங்கள் பங்குதாரர் இருப்பார். நினைவில் கொள்ளுங்கள், இந்த கடினமான இடங்களைக் கடக்க அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் இருங்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும். வாழ்க்கை உங்கள் மீது என்ன வீசினாலும், உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் அறிவைக் கொண்டு ஒவ்வொரு பிரச்சினையையும் சுலபமாக சமாளிப்பீர்கள். வாரத்தின் முதல் பாதியில் தேர்வுகள் அல்லது போட்டிகளுக்காக படிக்கும் எவருக்கும் அதிர்ஷ்டமாக இருக்கும்.

மனம் விரும்பியதை அடைவீர்கள் மற்றும் அதிகாரம், அரசாங்கத்தைப் பற்றிய சில பெரிய திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வீர்கள். சட்ட ரீதியான விஷயங்களில் மிகச்சிறப்பாக செயலாற்றுவீர்கள். அதே சமயம், எதிரணியினர் உங்களுடன் ஒரு சமரசம் செய்து கொள்ளவும் விரும்புவார்கள். ஆனால், உங்கள் போட்டியாளர்கள் உங்கள் திட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம். காதல் விஷயங்களுக்கும் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். மேலும், திருமணமாகாத சிலருக்குத் திருமணம் கை கூட வாய்ப்புள்ளது. திருமணமானவர் எனில் அனைத்தும் நனறாகவே இருக்கும்.

தனுசு: இந்த வாரம் மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால், நீங்கள் அனைத்து விஷயங்களிலும் நிதானமாகவோ அல்லது பகட்டாகவோ இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். முதல் சில நாட்களில், வேலையில் உங்கள் திறமை அனைத்தையும் ஈடுபடுத்துவது சந்தேகத்துக்கு இடமின்றி பலனைக் கொடுக்கும். மேலும் நெருங்கிய நண்பர்களும், குடும்பத்தினரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பரீட்சை அல்லது போட்டிக்குத் தயாராகிறீர்கள் என்றால், அதைப் பற்றிய சில நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் காதல் வாழ்க்கையை வலுவாக்க, உங்கள் காதல் துணைக்கு என்ன தேவை மற்றும் எதை விரும்புகிறார் என்பதைக் கண்டறிந்து அதைக் கொடுங்கள். வாழ்க்கைத் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க, நீங்கள் மிகவும் பிஸியாக இருக்கும்போது கூட நேரம் ஒதுக்குங்கள். வார இறுதியில், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதையும், சரி சம விகித உணவு உட்கொள்ளுவதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அன்றாட உடற்பயிற்சி செய்வதை உங்கள் வழக்கத்தில் கொள்ளுங்கள்.

மகரம்: இந்த வாரம் வேலைகள் நிறைந்த பரபரப்பான வாரமாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களின் ஆசை இந்த வாரம் நிறைவேறும். கமிஷன் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமுள்ளதாக இருக்கும்.

நீண்ட நாட்களாக நிலம், கட்டடம், வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இந்த வாரம் உங்கள் ஆசை நிறைவேறும். இளைஞர்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் செலவிடுவார்கள். அதீத ஆர்வத்துடன் வியாபாரம் தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் காதல் உறவை ஆழப்படுத்தவும், பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், உங்கள் காதல் துணையைப் பற்றிய சிறிய விஷயங்களில் கூட நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காணும் போது, விவாதம் செய்வதை விட பேசுவது நல்லது. திருமண வாழ்க்கையில் இனிமை இருக்கும், ஒவ்வொரு அடியிலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கும்பம்: நீங்கள் மிகவும் உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். இது உங்கள் வேலையை ஆச்சரியப்படுத்தும் வகையில் அற்புதமாக்குகிறது. முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தில் பெரிய பதவியில் உள்ளவர்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்வார்கள். மேலும், உங்களுக்கு சில பெரிய பணிகளைக் கூட வழங்கக்கூடும்.

பல ஆண்டுகளாக வேலை தேடுகிறீர்கள் என்றால், இந்த வாரம் உங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல வேலை கையில் கிடைக்கலாம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு ஒரு பெரிய வெற்றிகரமான வாரமாக இருக்கலாம். வார இறுதிக்குள், வீட்டு வசதிக்குத் தேவையான பொருட்களை வாங்கி உங்கள் இடத்தை அழகுபடுத்தலாம் அல்லது சரிசெய்யலாம்.

மீனம்: இந்த வாரம் உங்கள் உத்யோகம், வியாபாரம் மற்றும் உங்கள் வாழ்க்கையின் பிற பகுதிகளில் நன்றாக செயல்படலாம். இது உங்களையும், உங்கள் குடும்பத்தையும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் மாற்றும். சரியான நேரத்தில் சரியான தேர்வு செய்வது அதிகப் பணம் சம்பாதிக்கவும், உங்களை வெற்றிகரமாக மாற்றவும் உதவும்.

கலை, இசை அல்லது பத்திரிகைத் துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான ஒன்றாக இருக்கலாம். உங்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவதைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், அது இந்த வாரம் நடக்கலாம். வயதான அல்லது புத்திசாலித்தனமான நபர்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கலாம் அல்லது வெற்றி பெறலாம்.

வார இறுதியில் குடும்பத்துடன் பயணம் செய்யலாம் மற்றும் அனைவருடனும் ஒற்றுமையாக நேரத்தைச் செலவிடலாம். நீங்கள் உத்யோகத்தில் உள்ளவர் என்றால் அதிகப் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளையும் காணலாம். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு வலுவடையக்கூடும். மேலும், நீங்கள் ஒருவர் மீது மற்றொருவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தால், உங்கள் வீடு மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.