ETV Bharat / state

மீண்டும் சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கிய முருகன்! - Continued Murugan fasting vellur jail

வேலூர்: தனிச்சிறையில் தன்னை மாற்றாததைக் கண்டித்து சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

murugan
author img

By

Published : Nov 11, 2019, 11:26 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி அவரது அறையிலிருந்து செல்ஃபோன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முருகன் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

செல்ஃபோன் பறிமுதல் செய்த விவகாரத்தைக் காரணம் காட்டி தன்னை தனிச்சிறையில் வைத்து சித்ரவதை செய்வதாகவும் உணவு அருந்தவிடாமல் கொடுமை படுத்துவதாகவும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது முருகன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

தன்னை தனிச்சிறையிலிருந்து பழைய சிறைக்கு மாற்றக்கோரி 15 நாட்களுக்கு மேலாக முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு சில தினங்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முருகன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.

இந்த நிலையில் தற்போது இன்று முருகன் மீண்டும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்காக முறைப்படி சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் மனு அளித்து முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்தமுறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது உறுதியளித்தபடி தன்னை தனிச்சிறையிலிருந்து பழைய சிறைக்கு மாற்றாததைக் கண்டித்து முருகன் உண்ணாவிரதம் இருந்துவருவதாகக் கூறப்படுகிறது.

வேலூர் மத்திய பெண்கள் தனிச்சிறையில் உள்ள முருகனின் மனைவி நளினி தனது கணவருக்காக உண்ணாவிரதம் இருந்து சில தினங்களுக்கு முன்புதான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘தனி அறை... உணவு கொடுக்காமல் சித்ரவதை..!’ - முருகன் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம்Body:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார் இந்நிலையில் கடந்த மாதம் 18-ம் தேதி அவரது அறையில் இருந்து செல்போன் மற்றும் சிம் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது இதுதொடர்பாக முருகன் மீது புகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் செல்போன் பறிமுதல் விவகாரத்தை காரணம் காட்டி தன்னை தனிச் சிறையில் வைத்து சித்ரவதை செய்வதாகவும் உணவு அருந்த விடாமல் கொடுமை படுத்துவதாகவும் செல்போன் பறிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது முருகன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார் மேலும் தன்னை தனிச் சிறையில் இருந்து பழைய சிறைக்கு மாற்றக் கோரி 15 நாட்களுக்கு மேலாக முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் பிறகு தினங்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முருகன் உண்ணாவிரத்த்தை கைவிட்டார் இந்த நிலையில் தற்போது இன்று முருகன் மீண்டும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதன்படி முறைப்படி சிறை கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் மனு அளித்து முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த முறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின்போது உறுதியளித்தபடி தன்னை தனிச்சிறையிலிருந்து பழைய சிறைக்கு மாற்றாததை கண்டித்து முருகன் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது இதற்கிடையில் வேலூர் மத்திய பெண்கள் தனிச் சிறையில் உள்ள முருகன் மனைவி நளினி தனது கணவருக்காக உண்ணாவிரதம் இருந்து சில தினங்களுக்கு முன்புதான் அதை கை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.