திருப்பத்தூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தின் சாலை ஓரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டமாக உருவான பிறகு காவல் துறையினர் தங்களுக்கு அதிக அளவு தொந்தரவு கொடுக்கின்றனர் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பியுடன் சேர்ந்து 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களை அழைத்து குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த நல்லதம்பி, ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: போலி அடையாள அட்டையுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தவரிடம் விசாரணை