ETV Bharat / state

சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு; ஏராளமான பக்தர்கள் தரிசனம் - sivan temple

காட்பாடி அருகே பங்குனி உத்திரத்தில் சிவன் பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

vellore
சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு
author img

By

Published : Apr 8, 2023, 11:13 AM IST

சிவன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் அதிசய நிகழ்வு

வேலூர்: காட்பாடி அடுத்த விண்ணம்பள்ளி கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் 1100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 23 ஆம் தேதி முதல் சித்திரை 1 தேதி வரை 7 நாட்கள் திருகோயிலில் உள்ள சிவன்பெருமான் திருமேனி மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்வு நடைபெறும்.

அதே போல் இந்தாண்டு பங்குனி உத்திராயனத்தில் பங்குனி மாதம் 23 முதல் சித்திரை 1 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுகிறது. சிவன் மீது சூரிய ஒளி படும் இந்த அதிசய நிகழ்வு காலை 6 மணி முதல் 6.30 வரை நடைபெறும். இந்த அதிசய நிகழ்வு நடைபெறுவதால் சூரியன் பகவானை வழிப்படும் திருத்தலமாக இந்த கோயில் கருதப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை ஒளிக்கதிர்கள் சிவன் மீது படுவதால் இந்த நிகழ்வைக் காண மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அகதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை புரிகின்றனர். இந்த கோயிலுக்கு வந்து சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து வழிபடுகின்றனர். சிவபெருமானை சூரியன் தரிசிப்பதால், இதை காணும் பக்தர்களுக்கு ஏழு பிறவிகளில் செய்த வினைகள் தீரும் என்பது ஐதீகமாக கருதப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காட்பாடி ஒன்றிய குழு பெருந்தலைவர் வேல்முருகன், திமுக டி.கே.முரளி, காட்பாடி 5 -வது வட்ட செயலாளர் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யப்பட்டது. சிவபெருமானை சூரியன் தரிசிக்கும் போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய... என கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: இறந்தவர் போல வேடமிட்ட நபர்; சேலத்தில் பாடைகட்டி விநோத வழிபாடு செய்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.