ETV Bharat / state

ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார்? - கே.சி. வீரமணி கேள்வி - vellore

வேலூர்: முதலமைச்சரை கேள்வி கேட்கும் ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது பற்றி முதலில் அவர் பதில் சொல்ல வேண்டும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

k.c.veeramani
author img

By

Published : Aug 29, 2019, 12:54 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் செயல்படும் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவு மையத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.

இதில், வேலூர், காட்பாடி, சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 1912, 1800 4258 912 என்ற எண்களுக்கு புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் கே.சி வீரமணி புகார் மையத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சர் வெளிநாடு சென்றாலும் அரசு நிர்வாகம் தொடர்ந்து எப்போதும் போல செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்றார். அவரது வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்வது தொடர்பாக ஏற்கனவே முதலமைச்சர் பதில் அளித்துவிட்டார் என்றும் கூறினார்.

ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பது பற்றி முதலில் அவர் பதில் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Intro:வேலூரில் 23 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட மின்தடை புகார் மையத்தை அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்
Body:வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைந்துள்ள மாவட்ட மின் வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் ரூ.23.23 லட்சம் மதிப்பில் 24 மணி நேரம் செயல்படும் கணினி மயமாக்கப்பட்ட மின்தடை புகார் பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது இந்த பதிவு மையத்தை தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே சி வீரமணி இன்று துவக்கி வைத்தார். இங்கு வேலூர்், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், வாலஜா, ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 1912 மற்றும் 18004258912 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். தொடர்ந்து அவர் புகார் மையத்தில் அமர்ந்து வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வீரமணி, தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டதன்படி 24 மணி நேரமும் இயங்கக்கூடிய புகார் பதிவு மதியம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக உள்ளது இருப்பினும் ஆங்காங்கே ஏற்படும் மின்தடை குறித்த பிரச்சினைகளை இந்த புகார் மையத்தில் தெரிவிக்கலாம் இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார் தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் பேட்டி அளிக்கையில், முதல்வர் வெளிநாடு சென்றாலும் கூட அரசு நிர்வாகம் தொடர்ந்து எப்போதும் போல இயங்கும் வழக்கமாக எங்களுக்கு வழங்கக்கூடிய அறிவுரைகளை முதல்வர் வழங்கியுள்ளார் முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்வது தொடர்பாக ஏற்கனவே முதல்வர் பதில் அளித்துவிட்டார் அதாவது ஸ்டாலின் எதற்காக அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்பதற்கு முதலில் அவர் பதில் சொல்லட்டும். எனவே ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.