திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேட்டரியில் இயங்கும் ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில் 13 மூன்று சக்கர வாகனம், அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 29 பயனாளிகளுக்கு மானியத் தொகையுடன் இருசக்கர வாகனங்களை வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி வீரமணி வழங்கினார்.
பின்னர், அமைச்சர் கே.சி. வீரமணி பேசுகையில், ‘வேலூர் பெரிய மாவட்டமாக இருந்த நிலையில் தற்போது மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டை பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி கூடிய விரைவில் கொண்டுவரப்படும்.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பாக தமிழ்நாடாக திகழ்ந்து வருகிறது. அதற்காக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில் தற்போது இருசக்கர வாகனங்கள் பெண்களுக்கு மானியத்துடன் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
இவ்விழாவில் நகராட்சி ஆணையர் ராமஜெயம், அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குப்பைகளை அள்ள நவீன பேட்டரி வாகனங்கள் சாத்தூரில் அறிமுகம்!