தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி நேற்று (பிப்.09) வேலூர் அண்ணா கலையரங்கத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தொடக்க உரை ஆற்றிய வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ''விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த நம்முடைய முதலமைச்சர், கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் (ஓ.பன்னீர்செல்வம்)'' என்றார்.
அதாவது இபிஎஸ் என்று கூறுவதற்கு பதிலாக ஓபிஎஸ் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளார், இன்றைக்கு தேர்தல் பரப்புரைக்கு நம்முடைய மாவட்டத்திற்கு வந்திருக்கின்றார்" என்று கூறிவிட்டு, "கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்புக்கு இணங்க நம்மை எல்லாம் சந்திப்பதற்காக கழகத்தினைடைய இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ்" என்று மீண்டும் மீண்டும் இரண்டு முறை இபிஎஸ் (எடப்பாடி பழனிசாமி) என்று கூறுவதற்கு பதிலாக ஓபிஎஸ் என்றே தவறுதலாக கூறினார்.
கடைசியாக, "ஓபிஎஸ் ஆணைக்கு இணங்க முதலமைச்சர் இபிஎஸ் உரை ஆற்ற இருக்கின்றார்கள்" என்று கூறிவிட்டு தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார்.
முதலமைச்சரின் பெயரை அமைச்சர் தவறுதலாக உச்சரித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.