ETV Bharat / state

மேல்பாடி காவல் நிலைய எஸ்ஐ கார்த்தி பணியிடை நீக்கம் - Melpadi Police Station SI Karthi fired

காவல் நிலைய எஸ்ஐ கார்த்தி தன்னை அவதூராகப் பேசி அவமானப் படுத்தியதாகக் கூறி இளைஞர் சரத் தீக்குளித்த வழக்கில் எஸ்.ஐ. கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவுயிட்டுள்ளார்.

melpadi-police-station-si-karthi-suspendedமேல்பாடி காவல் நிலைய எஸ்ஐ கார்த்தி பணியிடை நீக்கம்

author img

By

Published : Apr 18, 2022, 9:20 AM IST

வேலூர்: காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்த சரத் (25) என்பவர் ஏப்ரல் 11ஆம் தேதியன்று மேல்பாடி காவல் நிலையம் அருகில் பெட்ரோல் ஊற்றி தீக் குளித்தார். எஸ்ஐ கார்த்தி தன்னை அவதூராகப் பேசி அவமானப் படுத்தியதாகக் கூறி இளைஞர் சரத் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த நிலையில், அவர் தற்பொழுது வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடைய மேல்பாடி காவல் நிலைய எஸ்ஐ கார்த்தி ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவுயிட்டுள்ளார்.

இதற்கிடையில், சரத் மற்றும் அவரது தம்பி அஜித் தொடர்பான வழக்கை முறையாகக் கையாளாததால் பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: எஸ்ஐ தொல்லை கொடுக்கிறார்... தற்கொலைக்கு முயன்ற மூவரிடம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.