ETV Bharat / state

"என் சாவுக்கு ஐஎஃப்எஸ் நிறுவனம்தான் காரணம்" - ரூ.26 லட்சம் பணத்தை இழந்த நபர் விபரீத முடிவு! - வேலூர் ஐஎஃப்எஸ் மோசடி

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து 26 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நபர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

man
வேலூர்
author img

By

Published : May 2, 2023, 5:04 PM IST

வேலூர்: வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குத்தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ஏற்கெனவே 6 பேரை கைது செய்த நிலையில், அந்நிறுவனத்தின் முக்கிய ஏஜென்டான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர், கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் 26 லட்சம் ரூபாயை முதலீடு செய்து பணத்தை இழந்த, வேலூர் மாவட்டம், குடியாத்தம் கல்லேரி பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவர்(39) இன்று(மே.2) தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம்தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

அந்த தற்கொலைக் கடிதத்தில், "அதிக வட்டித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியதால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரிய கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷிடம் 26 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துவிட்டேன். அவர் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் ஏஜென்ட்டாகச் செயல்பட்டு வந்தார். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரால், அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். கடன் வாங்கி, அவ்வளவுப் பணத்தையும் அவரிடம் கொடுத்திருந்தேன்.

இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்பதால், என்னால் திருப்பித் தர முடியவில்லை. தனிப்பட்ட முறையிலேயே, நான் 12 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வட்டி கொடுத்துவிட்டேன். அதிக கடன் சுமையில், மாட்டிக்கொண்டேன்.

என் சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனம்தான் காரணம். தயவு செய்து, இது குறித்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோரிடம் உரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர், பிரசாத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக் கடிதத்தையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த காட்பாடியைச் சேர்ந்த நபர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: ஏஜென்ட் கைது - ரூ.2.5 லட்சம் பறிமுதல்!

இதையும் படிங்க: IFS Scam: ஐஎப்எஸ் நிதி மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி ஜஸ்டின் ராஜ் நியமனம்!

இதையும் படிங்க: ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி - முக்கிய நிர்வாகி வீட்டில் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.