ETV Bharat / state

22 நாள்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட மின் தொழிலாளி - சந்தேகிக்கும் உறவினர்கள் - திருப்பத்தூரில் வேலைக்குச் சென்ற ஒப்பந்த மின் தொழிலாளி அழுகிய நிலையில் மீட்பு

திருப்பத்தூர்: ஏலகிரி மலைக்கு மின்சார பராமரிப்புப் பணிக்குச் சென்ற ஒப்பந்த மின் தொழிலாளி 22 நாள்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்ட முத்துக்குமார்
அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்ட முத்துக்குமார்
author img

By

Published : Jan 22, 2020, 9:47 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்த கோட்டை கோடியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் முத்துக்குமார் (30). இவர் ஜோலார்பேட்டையிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் நான்கு ஆண்டுகளாக ஒப்பந்த கூலித் தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.

இவருக்கு ஷகிலா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஷகிலா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். முத்துக்குமார் கடந்த ஒரு வாரமாக வாணியம்பாடி கலந்திராவில் உள்ள தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் இருந்துவந்துள்ளார். முத்துக்குமார் கடந்த 31ஆம் தேதி காலை ஏலகிரி மலைக்கு மின் பராமரிப்புப் பணிக்காக ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள் உட்பட 14 பேருடன் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, முத்துக்குமார் தனது இருசக்கர வாகனத்தை ஏலகிரி மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளியான முருகன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றுள்ளனர்.

பின்னர், வேலை முடித்து அனைவரும் மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளனர். ஆனால், முத்துக்குமார், முருகன் ஆகிய இருவரும் அரை மணி நேரம் கழித்து மலையிலிருந்து கீழே இறங்கியுள்ளார். பின்பு, இருசக்கர வாகனம் நிறுத்திவைக்கப்பட்ட இடத்தில் முத்துக்குமாரை இறக்கிவிட்டு முருகன் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், முத்துக்குமார் அன்றிரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், அவர் எங்கும் கிடைக்காததால் ஜோலார்பேட்டையிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில், முத்துக்குமார் குறித்து கேட்டுள்ளனர். ஆனால், இது குறித்து எந்தத் தகவலும் அலுவலர்கள் தெரிவிக்காததால், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு முத்துகுமாரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து முத்துக்குமார் காணவில்லையென ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் முத்துக்குமாரைத் தேடி வந்தனர். இந்த மாதிரியான சூழலில் கடந்த மாதம் 31ஆம் தேதி இரவு காணாமல்போன முத்துக்குமார், ஏலகிரி மலை சாலை 1ஆவது வளைவு பகுதியிலிருந்து காட்டுப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளே, மரப் புதருக்குள் அழுகிய நிலையில் சடலமாக காய்ந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கூலித்தொழிலாளி ஒருவர், ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஊர் மக்கள் ஜோலார்பேட்டை காவல் துறையினருக்கும் முத்துக்குமாரின் உறவினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், முத்துக்குமாரின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று பார்த்து, அந்தச் சடலம் காணாமல்போன முத்துக்குமாரின் சடலம்தான் என அடையாளம் காட்டினர்.

அதிர்ச்சியடைந்த முத்துக்குமாரின் உறவினர்களும் ஊர் மக்களும் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி சடலத்தை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவரைக் கொலை செய்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரையும் ஏலகிரி மலை பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரையும் கைது செய்யக்கோரியும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்ட முத்துக்குமார்

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஆண் சடலம் மீட்பு!

Intro:Body:

ஏலகிரி மலைக்கு மின்சார பராமரிப்பு பணிக்கு சென்ற ஒப்பந்த மின் தொழிலாளி 22 நாட்களுக்குப் பிறகு அழுகிய நிலையில் சடலமாக மீட்பு அடித்துக்கொலையா? என சாலை மறியலில் ஈடுபட்டு உறவினர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் ஜோலார்பேட்டையில் பரபரப்பு...

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைக்கு மின்சார பராமரிப்பு பணிக்கு வேலைக்கு சென்ற மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளி மாயமாகி தேடி வந்த நிலையில் 22 நாட்களுக்குப் பிறகு ஏலகிரி மலை காட்டுக்குள் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சடலமாக மீட்பு. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்த கோட்டை, கோடியூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவரின் மகன் முத்துக்குமார்( 30). இவர் ஜோலார்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த நான்காண்டுகளாக ஒப்பந்தக் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு ஷகிலா என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ஷகிலா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வாரமாக வாணியம்பாடி அருகே உள்ள கலந்திராவில் தனது மாமனார் வீட்டில் தனது குடும்பத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் முத்துக்குமார் என்பவர் கடந்த 31ஆம் தேதி காலை ஏலகிரி மலைக்கு மின் பராமரிப்பு பணிக்காக ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்கள் உட்பட 14 பேர் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முத்துக்குமார் என்பவர் தனது பைக்கை ஏலகிரி மலை அடிவாரத்தில் நிறுத்திவிட்டு பொன்னேரி பகுதி சேர்ந்த ஒப்பந்த தொழிலாளியான முருகன் என்பவரின் பைக்கில் இருவரும் சென்றுள்ளனர்.பின்னர் வேலை முடித்து அனைவரும் மலையிலிருந்து அன்று மாலை கீழே இறங்கி உள்ளனர். இதில் முத்துக்குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரும் அரை மணி நேரம் கழித்து மலையில் இருந்து கீழே இறங்கிய தாக கூறப்படுகிறது. பின்பு முருகன் என்பவர் முத்துக்குமாரின் பைக் நிறுத்திய இடத்தில் விட்டுவிட்டு முருகன் தனது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துக்குமார் அன்று இரவு முழுவதும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால் ஜோலார்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடத்தில் முத்துக்குமாரின் வேலைக்கு சென்ற விவரம் குறித்து கேட்டுள்ளனர். ஆனால் இது குறித்து எந்த தகவலும் அதிகாரிகள் தெரிவிக்கிக்காததால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு முத்துகுமாரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து முத்துக்குமார் காணவில்லையென ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் இதனைத்தொடர்ந்து முத்துக் குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஏலகிரி மலை முழுவதும் காட்டுப்பகுதியில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி இரவு காணாமல் சென்ற முத்துக்குமார் பொன்னேரி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் ஏலகிரி மலை சாலை 1வது வளைவு பகுதியில் இருந்து காட்டுப்பகுதிக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளே மர புதருக்குள் அழுகிய நிலையில் சடலமாக காய்ந்த நிலையில் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கூலித்தொழிலாளி ஊருக்குள் வந்து இருந்த நிலையில் சடலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் முத்துக்குமாரின் உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் முத்துக்குமாரின் உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று பார்த்தபோது காணாமல் சென்ற முத்துக்குமார் தான் என்பது உறுதியானது. இதனையடுத்து கத்தி கதறி அவரது குடும்பத்தார் ஏலகிரி மலை சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முத்துக்குமாரை அடித்துக் கொலை செய்து காட்டுப்பகுதிக்குள் வீசி சென்றுள்ளனர் எங்களுக்கு இரண்டு பேர் மீது சந்தேகம் உள்ளது என கூறி சின்ன பொன்னேரி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மீதும் ஏலகிரி மலை பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்ற இருவரையும் கைது செய்யக்கோரி சடலத்தை எடுக்க விடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன்,சப் இன்ஸ்பெக்டர் விஜய் முத்துக்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ஏலகிரி மலைக்கு செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.