வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லாகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவமணி. இவருக்கு சிவசக்தி, தங்கராஜ் என இரண்டு மகன்கள் உள்ளனர். தங்கராஜ் (29) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த சாந்தி (25) உடன் திருமணமாகி ஏழு ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ரோஹித் (5), தட்சித்(1) மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்து 45 நாட்கள் ஆகிறது.
இந்நிலையில், சிவமணி தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தை தங்கராஜுக்கு தரமுடியாது, முதல் மகன் சிவசக்திக்கு மட்டும் தான் நிலத்தைப் பிரித்து தருவேன் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தங்கராஜ் கோபித்துக்கொண்டு தன் மனைவி, குழந்தைகளை கணவாய் பகுதியில் உள்ள தனது மாமியார் தீபா வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தினமும் தங்கராஜ் வேலைக்குச் சென்று வந்து மாமியார் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு இரவு நேரத்தில் மட்டும் புல்லாகுட்டைப் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கி விடுவார்.
பின்னர், சாந்தியை தனது வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால், காலையில் சாந்தி ஃபோன் செய்தபோது தங்கராஜ் எடுக்கவில்லை. வீட்டின் உள்ளே அவர் இருந்தும் வெளிவராததையடுத்து உறவினர்கள் வீட்டில் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் தங்கராஜ் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், தன் கணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவருடைய தந்தையும், உறவினர்களும் தான் கொலை செய்திருப்பார்கள் என அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க : தப்பை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநரை வெட்டிக்கொன்ற கும்பல்!