வேலூர்: கணியம்பாடி அடுத்த கத்தாழம்பட்டு, லட்சுமிபுரம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கயிலாய நாதர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் கடைசி திங்களான சோமவார திங்களை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.இதில் 16 பசுக்கள் தான் ஈன்ற கன்றுகளுடன் நிற்க வைக்கப்பட்டு கால்நடைகளை நோய் தாக்கத்தில் இருந்து காக்க வேண்டி சிறப்பு கோ பூஜை நடத்தப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தேங்கி நிற்கும் மழை நீர் - உடனடியாக அகற்ற உத்தரவிட்ட வேலூர் கலெக்டர்