வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ளது கெங்கையம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா நடைபெறும். விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர் பிழைக்கவைத்த புராணக் கதையை நினைவுகூறும் வகையில் சிரசு திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதேபோல், இந்த வருடத்திற்கான சிரசு திருவிழா இன்று காலை தொடங்கியது. குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்த அம்மனின் சிரசு லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கெங்கையம்மன் கோயிலில் வைக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கூழ்வார்த்தல், அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மேலும், இத்திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் பகுதியில் இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.