ETV Bharat / state

7 சவரன் நகையை மீட்டு கொடுத்த காட்பாடி ரயில்வே காவல் துறை! - Katpadi railway police handover the 7 savaran gold who lost in station news

வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் தவறவிட்ட பையுடன் கிடந்த ஏழு சவரன் தங்க நகையை மீட்ட, ரயில்வே காவல் துறையினர் உரியவரிடம் ஒப்படைத்தனர்.

7 சவரன் நகையை மீட்டு கொடுத்த காட்பாடி இரயில்வே காவல் துறை !

author img

By

Published : Jan 28, 2021, 3:36 PM IST

வேலூர் மாவட்டம் விருதம்பட்டைச் சேர்ந்தவர் சுகன்யா (29). இவர் இன்று (ஜன. 28) காலை காட்பாடியிலிருந்து பிருந்தாவனம் பயணிகள் சிறப்பு விரைவு ரயிலில் பெங்களூரு செல்லும்போது, ஒரு பையை காட்பாடி ரயில் நிலையத்தில் தவறவிட்டுள்ளார்.

அப்போது அவ்வழியே சென்ற பெண் காவலர் சரளா என்பவர் அந்தப் பையைக் கண்டெடுத்துள்ளார். அச்சமயம் அந்தப் பையிலிருந்த செல்போன் மணி ஒலித்துள்ளது. அதில் பேசிய சுகன்யா, பை, தன்னுடையதுதான் என்றும், நான்தான் தவறவிட்டேன் எனவும் சரளாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காட்பாடி ரயில்வே காவல் துறையினர் சுகன்யாவின் சகோதரரை அழைத்து அவரிடம் பையை ஒப்படைத்துள்ளனர். அதில் ஏழு சவரன் தங்க நகைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...'பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக ஏமாற்றாதீர்கள்' - தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.