ஏப்ரல் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், வேலூர் தொகுதிக்கு மட்டும் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. இதே தொகுதியில், அதிமுக சார்பாக ஏ.சி. சண்முகம் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.